தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில், கல்வியியல் பாடத்தில்,
முழுநேர மற்றும் பகுதிநேர பிஎச்.டி., படிப்புக்கான விண்ணப்பங்களை இம்மாதம்,
27ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்" என பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) ராஜேந்திரன் தெரிவித்து உள்ளார்.
விண்ணப்பக் கட்டணம்,
750 ரூபாய்; எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு, 350 ரூபாய். விண்ணப்பக்
கட்டணத்தை, "பதிவாளர், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்,
சென்னை" என்ற பெயரில், டி.டி., ஆக செலுத்தி பதிவாளர் அலுவலகத்தில்,
விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பம் வாங்கும்போது, எஸ்.சி., -
எஸ்.டி., பிரிவினர், தங்கள் சாதிச் சான்றிதழ் நகலை,சமர்ப்பிக்க
வேண்டும்.பல்கலைக்கழகத்தின் www.tnteu.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை,
"டவுன்லோடு" செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை
சமர்ப்பிக்க, ஜன., 27ம் தேதி கடைசி நாள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...