முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை வினாத்தாளால் பாதிக்கப்பட்ட.மனுதாரர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கி சென்னை உயர்நீதி மன்றம் நேற்று (27.01.2014 )உத்தரவு.
முதுகலை பட்டதாரி தமிழ்
ஆசிரியர் பணி நியமனத்துக்கான தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியல் வெளியிடப்பட்ட
நிலையிலும்,மேலும் பல முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் பி வரிசை
வினாத்தாளால் பாதிக்கப்பட்டோர் தொடர்ந்து சென்னை உயர்நீதி மன்றத்திலும்
மதுரைக்கிளையிலும் வழக்கு தொடுத்தவண்னம் உள்ளனர்ஏற்கனவே நீதியரசர்
சுப்பையா முன் விசாரணைக்கு வந்த பல்வேறு வழக்குகளில் சென்னை
உயர்நீதிமன்ற மதுரைகிளையில் ஆண்டனி கிளாரா, விஜயலட்சுமி ஆகியோருக்கு 21
கருணைமதிப்பெண்கள் வழங்கி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது போன்று
மனுதாரர்களுக்கும் 21 கருணை மதிப்பெண்கள் வழங்கி
உத்தரவிட்டிருந்தார்.இன்றும் அதேபோன்று பலவழக்குகள் நீதியரசர் சுப்பையா
முன் விசாரணைக்கு வந்தன.
பல்வேறு மாவட்டங்களைசேர்ந்த வேடியப்பன், சாந்தி,முத்துலட்சுமி,உள்ளிட்ட பல மனுதாரர்கள் தங்களுக்கும் கருணை மதிப்பெண் வழங்கவேண்டும் என தங்கள் மனுவில் கோரியிருந்தனர்.அதனையேற்றுக்கொண்ட நீதிபதி அனைவருக்கும் 21 கருணை மதிப்பெண்கள் வழங்கி உத்தரவிட்டதாக தெரிகின்றது. மனுதாரர்கள் சார்பில் வழக்கறிஞர் விஜயன் ஆஜரானர்.இதைத்தவிர தமிழ்பாடத்தில் வெளியிடப்பட்ட இறுதி விடைக்குறிப்பில் சில விடைகள் தவறாக உள்ளது என அதனை எதிர்த்தும் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

some news tells gov booked YMCA ground on 13th feb for some program to be conducted. padasalai viewers anyone knows about it pl give comments or if anyone can conform this news means confirm it and give the details pl.
ReplyDelete