சென்னை மாவட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு
மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 5ம் தேதி தொடங்குகிறது. பிளஸ் 2
வகுப்புக்கான பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்குகிறது. இந்த ஆண்டு
பிளஸ் 2 தேர்வை 8 லட்சம் மாணவ மாணவிகள் எழுத உள்ளனர். தேர்வுக்கு முன்னதாக
அறிவியல் பாடப் பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வுகளை
நடத்தி முடிக்க தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது.
அந்தந்த மாவட்டங்களை
சேர்ந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் செய்முறைத் தேர்வுக்கான தேதிகளை
முடிவு செய்வார்கள். இருப்பினும் பிப்ரவரி 28ம் தேதிக்குள் செய்முறைத்
தேர்வுகளை நடத்தி முடித்து அதில் மாணவர்கள் பெற்ற அகமதிப்பெண்களை
தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
சென்னை மாவட்டத்தில் இந்த ஆண்டு பிளஸ் 2
தேர்வில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் மாணவ மாணவிகள் பங்கேற்க உள்ளனர்.
அறிவியல் பாடங்களை எடுத்து படிக்கும் 54 ஆயிரம் மாணவர்கள் செய்முறைத்
தேர்வு எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுக்கான
செய்முறைத் தேர்வுகளை பிப்ரவரி 5ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடத்த
திட்டமிடப்பட்டுள்ளது.
எக்ஸ்ட்ரா தகவல்
சென்னை மாவட்ட பள்ளிகள் தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் செய்முறைத் தேர்வுகள் தொடங்கும் தேதி இன்று வெளியாகும் என தெரிகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...