திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு 12ஆ அந்தஸ்தை
வழங்குவதற்கான முடிவை க்எஇ எடுத்துள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்
விரைவில் அப்பல்கலைக்கு தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
UGC வட்டாரங்கள் கூறியதாவது: திருவள்ளுவர்
பல்கலைக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சென்று ஆய்வுசெய்த நிபுணர் குழுவின்
அறிக்கையை UGC ஏற்றுக்கொண்டது. அந்த அறிக்கையில், 12B அந்தஸ்தைப் பெற
திருவள்ளுவர் பல்கலைக்கழகம் தகுதியானது என்று கூறப்பட்டிருந்தது.
இதன்மூலம் அப்பல்லைக்கழகம், UGC -ன் நிதியுதவியைப் பெற முடியும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக திருவள்ளுவர் பல்கலை வட்டாரங்கள்
கூறியதாவது: எங்கள் பல்கலைக்கு இது ஒரு பெரிய வெற்றி. நாங்கள் ஒரு புதிய
மைல்கல்லை அடைந்துள்ளோம். மேலும், NAAC அங்கீகாரத்தைப் பெறுவதற்கும்
நாங்கள் கடின முயற்சி எடுப்போம்.
மேலும், UGC -உடன் இணைக்கப்பட்ட தொலைநிலைக்
கல்வி அமைப்பின் மூலமாக, அஞ்சல் வழிக் கல்வியை நடத்துவதற்கு நிதி உதவி
கோரப்படும். ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் நிதியுதவியைப் பெறுவதற்கான திட்ட
அறிக்கை சமர்ப்பிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...