வீடுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் சமையல் காஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை மத்திய அரசு 12 ஆக உயர்த்தியுள்ளது. அடுத்த மாதம் முதல் இதை வாங்கிக் கொள்ளலாம்.
ஆதார் அட்டை கட்டாயம் இல்லை என்றும் அரசு அறிவித்துள்ளது. மக்களுக்கு மானிய
விலையில் சமையல் காஸ் சிலிண்டர்கள் வழங்கப்படுவதால் பெரிய நிதிச்சுமை
ஏற்படுவதை தடுக்க, சிலிண்டர் விநியோகத்தில் மத்திய அரசு கட்டுப்பாடுகொண்டு
வந்தது. இதன்படி, வீடுகளுக்கு மானிய விலையில் ஆண்டுக்கு 6
சிலிண்டர்கள்மட்டுமே வழங்க 2012ல் முடிவு செய்யப்பட்டது. இதற்கு கடும்
எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, 2013ம் ஆண்டில் இது 9 ஆக உயர்த்தப்பட்டது.
கூடுதலாக தேவைப்படுவோருக்கு மானியம் இல்லாமல் சந்தை விலையில் ரூ.1,258க்கு
சிலிணடர்கள் விற்கப்படுகிறது.இந்நிலையில், மானிய விலையில் வழங்கப்படும்
சிலிண்டர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும்படி மத்திய அரசை ஆளும் காங்கிரஸ்
உட்பட பல்வேறு கட்சிகள் தொடர்ந்துவலியுறுத்தி வந்தன.
டெல்லியில் சமீபத்தில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிமாநாட்டில் பேசிய கட்சியின் துணைத் தலை வர் ராகுல் காந்தி, மானிய விலையில் வழங்கப்படும் சிலிண்டர் எண்ணிக்கையை 12 ஆக உயர்த்தும் படி பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வேண்டுகோள் விடுத்தார். இதை மத்திய அரசு உடனடியாக ஏற்றது.டெல்லியில் பிரதமர் தலைமையில் நேற்று நடைபெற்ற அரசியல் விவகாரங்களுக்கான மத்தியஅமைச்சரவை கூட்டத்தில், இந்த திட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கூட்டத்துக்குப் பிறகு பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி அளித்த பேட்டி:வீடுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் சமையல் காஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கைதற்போதுள்ள 9ல் இருந்து 12 ஆக உயர்த்தப்படுகிறது. இதுவரை 9 சிலிண்டர்கள் வாங்கி விட்டவர்கள், பிப்ரவரி, மார்ச்சில் கூடுதலாக ஒரு சிலிண்டரை மானிய விலையில் வாங்கிக் கொள்ளலாம். ஏப்ரலில் இருந்து 12 சிலிண்டர்களை பெறலாம். இதன்படி, வீடுகளுக்கு மாதத்துக்கு ஒரு சிலிண்டர் மானிய விலை யில் வழங்கப்படும்.இதன் மூலம், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி மானியச் சுமை ஏற்படும்.நாடு முழுவதும் இப்போதுள்ள 15 கோடி சமை யல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களில், 89.2 சதவீதம் பேருக்கு ஆண்டுக்கு 9 சிலிண்டர் களே போதுமானதாக உள் ளது. 10 சதவீதம் பேருக்கு மட்டுமே சந்தை விலையில் கூடுதல் சிலிண்டர் தேவைப்படுகிறது. தற்போது, சிலிண்டர்கள் எண்ணிக்கை 12 ஆக உயர்த்துவதால், 97 சதவீத வாடிக்கையாளர்கள் மானிய விலையில் அதை பெறுவார்கள். இவ்வாறு மொய்லி கூறினார்.
நேரடி மானியம் வழங்கும் திட்டம் நிறுத்திவைப்பு
வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ சமையல் காஸ் சிலிண்டர்களின் சந்தை விலை ரூ.1,021. இதற்கு முன்பு சிலிண்டர்களுக்கு வழங்கப்படும் மானிய தொகையை எண்ணெய் நிறுவனங்களிடம் மத்திய அரசு செலுத்தி வந்தது. இந்த மானியம் பயன்படுத்தப்படுவதில் முறைகேடுகள் நடத்தப்பதாக குற்றச்சாட்டு எழுந்தை தொடர்ந்து, இதை மக்களுக்கே நேரடியாக வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்தாண்டுஅமல்படுத்தியது. இதன்படி, சிலிண்டர்களுக்கு வழங்கப்படும் மானிய தொகையான ரூ.435, வங்கி கணக்கு மூலம் மக்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த மானியத்தை பெறுவதற்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டதை தொடர்ந்து, பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. கிராமப்புறங்களில் மட்டுமின்றி நகர்புறங்களிலும் ஏராளமானோருக்கு ஆதார் அடையாள அட்டையும், வங்கி கணக்கும் இல்லாததால் இந்த நிதியை பெற முடியவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.இந்நிலையில், நேற்று நடைபெற்ற அரசியல் விவகாரத்துக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில், வங்கி மூலம் மானியத்தை வழங்கும் இந்த திட்டத்தை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது.
இது பற்றி பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி அளித்த பேட்டியில், ‘‘காஸ் சிலிண்டர்களுக்கு வங்கி மூலமாக மானியம் வழங்கக் கூடிய ‘நேரடி பலன் பண பரிமாற்ற திட்டம்’, 18 மாநிலங்களில் உள்ள 289 மாவட்டங்களில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. ஆதார் அடையாள அட்டை, வங்கி கணக்குகள் இல்லாததால் இந்த மானியத்தை பெற முடியவில்லை என்று ஏராளமான புகார்கள் வருவதால், இந்த பண பரிமாற்ற திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அரசு முடிவு செய்துள்ளது. இப்பிரச்னைகள் பற்றி ஆராய கமிட்டி அமைக்கப்படும். அது கொடுக்கும் பரிந்துரையின் அடிப்படையில், இத்திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும். அதுவரை, எண்ணெய் நிறுவனங்களிடம் நேரடியாக மானியத் தொகை வழங்கப்படும்’’ என்றார்.
*இதுவரை 9 சிலிண்டர்கள் வாங்கி விட்டவர்கள், பிப்ரவரி, மார்ச்சில் கூடுதலாக ஒரு சிலிண்டரை மானிய விலையில் வாங்கிக் கொள்ளலாம்.
*ஏப்ரலில் இருந்து 12 சிலிண்டர்களை பெறலாம். இதன்படி, வீடுகளுக்கு மாதத்துக்கு ஒரு சிலிண்டர் மானிய விலையில் வழங்கப்படும்.
*இதன் மூலம், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி மானியச் சுமை ஏற்படும்.

நல்ல முடிவு.
ReplyDelete