தமிழகம் முழுவதும் 12 லட்சம் பேர் எழுதிய குரூப் - 4 தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
தேர்வு முடிவை மேலும் ஒரு மாதம் தள்ளிவைத்து வெளியிட, அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25ல், குரூப் - 4 தேர்வு நடந்தது. இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பணிகளுக்காக நடந்த தேர்வை, 12.21 லட்சம் பேர் எழுதினர். இதன் முடிவு, இம்மாத இறுதிக்குள் வெளியாகும் என, கூறப்பட்டது. குரூப் - 4 தேர்வை,
பட்டதாரிகளும் எழுதியுள்ளனர். இவர்கள், குரூப் - 2 தேர்வையும் எழுதியுள்ளனர்.
2012ல் நடந்த குரூப் - 2 தேர்வில், நேர்முகத் தேர்வு அல்லாத உதவியாளர்
பணிக்கான தேர்வு முடிவை, இன்னும், தேர்வாணையம் வெளியிடவில்லை. குரூப் - 2 தேர்வு முடிவிற்கு முன், குரூப் - 4 தேர்வு முடிவை வெளியிட்டால், முதலில், கிடைத்த வேலையில் சேரலாம் என,முடிவெடுத்து, பட்டதாரிகளும், குரூப் - 4 வேலையில் சேர்வர்.
பதவி உயர்வு :
பின், குரூப் - 2 தேர்வு முடிவை வெளியிடும்போது,
அதில் தேர்ச்சி பெற்றால், குரூப் - 4 வேலையை கைவிட்டு, அதிக சம்பளம், விரைவாக, அதிகாரி நிலைக்கு பதவி உயர்வு ஆகிய சிறப்புகளை கொண்ட, குரூப் - 2 வேலைக்கு வருவர்.இதனால், குரூப் - 4 நிலையில், மீண்டும் காலி பணியிடம் ஏற்படும்.
இதற்கு, மீண்டும், சான்றிதழ் சரிபார்ப்பு நடத்த
வேண்டியிருக்கும். இந்த சிக்கலை மனதில் கொண்டு,முதலில், குரூப் - 2 தேர்வு முடிவை வெளியிட்டு, பணி நியமனம்
வழங்கியபின், குரூப் - 4 தேர்வு முடிவை வெளியிட, தேர்வாணையம்
திட்டமிட்டு உள்ளது. குரூப் - 2 சான்றிதழ் சரிபார்ப்பு, இரு வாரம் வரை நடக்கும் என்பதால், 20 நாள் முதல், 25 நாள் கழித்தே, குரூப் - 4 தேர்வு முடிவு வெளியாகும் என, துறை வட்டாரங்கள், தெரிவித்தன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...