Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

108 ஆம்புலன்ஸ் சேவைக்கான மருத்துவ உதவியாளர் மற்றும் ஓட்டுனர் பணிக்கான வேலைவாய்ப்பு முகாம்.

           மருத்துவம், காவல் மற்றும் தீ முதலிய அவசர சேவைகளுக்கான ஒருங்கிணைந்த அழைப்பு எண்ணான 108 மூலம் பொது மக்களுக்கு 24 மணி நேரமும் கிடைக்ககூடிய முற்றிலும் இலவச சேவையை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
 
தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களிலும்,
மொத்தம் 629 ஆம்புலன்சுகளுடன் இந்த 108 சேவை மக்களுக்கு தொடர்ந்து பயனளித்துக் கொண்டிருக்கிறது.
தமிழக அரசு, தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் கீழ், GVK EMRI நிறுவனத்துடன், அவசரகால சேவைகளுக்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் இணைந்து செயல்பட்டுவருகிறது.
GVK EMRI நிறுவனம் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மற்றும் அவசரகால மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாமினை நடத்த இருக்கிறது.

அதற்கான விவரங்கள் கீழ்வருமாறு;

பணியிடம்: தமிழகத்தின் எந்த பகுதியிலும் நியமனம்
பணி நேரம்: 12 மணி நேர ஷிப்ட் முறையில். இரவு மற்றும் பகல் ஷிப்ட் என மாறும்.

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணி நியமன ஆணை அதே நாளில் வழங்கப்படும்.

ஓட்டுனருக்கான அடிப்படைதகுதிகள்:
கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி அல்லது தவறியவர்கள்
வயது: நேர்முக தேர்வு அன்று 23 வயதுக்கு மேலும் 35 வயது மிகாமலும் இருக்க வேண்டும்.
பாலினம்: ஆண்
உயரம்: 162.5 செண்டிமீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும்
ஓட்டுனர்தகுதி: இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் Badge வாகன உரிமம்.
அனுபவம்: இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
மேற்குறிப்பிட்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்கள், தங்களுடைய கல்வி, ஓட்டுனர் உரிமம் மற்றும் அனுபவம் தொடர்பான அனைத்து அசல் சான்றிதழ்களையும் சரிபார்பதற்காக கொண்டு வரவேண்டும்.

தேர்வு முறை: 1. எழுத்துத் தேர்வு 2. தொழில்நுட்பத் தேர்வு 3. மனிதவள துறை நேர்காணல் 4. கண்பார்வை சம்பந்தப்பட்ட தேர்வு 5 .சாலை விதிகளுக்கான தேர்வு .

மாதஊதியம்: ரூ.7993/- (மொத்த ஊதியம்) .
தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு 9 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி வழங்கப்படும். பயிற்சிக்காலத்தில், தங்கும் வசதி மற்றும் தினசரி உணவுக்கான ரூ.100/- படியும் வழங்கப்படும்.

மருத்துவ உதவியாளருக்கான அடிப்படை தகுதிகள்:
கல்வித்தகுதி:
Category
Qualification
Age
work
Salary / Stipend
EMT - Basic B Sc. நர்சிங், அல்லது GNM, ANM, D Pharm, DMLT (12 ஆம் வகுப்பிற்கு பிறகு 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்). அல்லது Life Science Graduates (B.Sc. Zoology, Botany, Bio chemistry, Micro Biology, Plant Biology) 20 – 30 years Willing to work in shifts ( Day shift or night shift) Rs 8080/- plus allowances as applicable.
EMT – Trainee One year technician course from only Govt Medical College (12 ஆம் வகுப்பிற்கு பிறகு 1 ஆண்டு படித்திருக்க வேண்டும்).
EMT Technician
Ortho Technician
Respiratory Technician
ECG Technician
OT Technician
19 – 30 years Willing to work in shifts ( Day shift or night shift) Rs7500/- stipend for one year
B Sc. நர்சிங், Zoology, Botany, Bio chemistry, Micro Biology, Plant Biology & other Life Sciences. அல்லது GNM (12 ஆம் வகுப்பிற்கு பிறகு 3 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது ANM அல்லது DNA (12 ஆம் வகுப்பிற்கு பிறகு 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்) அல்லது DMLT (12 ஆம் வகுப்பிற்கு பிறகு 2 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்). அல்லது D Pharm (12 ஆம் வகுப்பிற்கு பிறகு 3 ஆண்டுகள் படித்திருக்க வேண்டும்)
One year certificate courses, Only from Govt medical colleges (12 ஆம் வகுப்பிற்கு பிறகு 1 ஆண்டு படித்திருக்க வேண்டும்).

பாலினம்: ஆண் மற்றும் பெண்.

தேர்வு முறை: 1. எழுத்துத் தேர்வு 2 .மருத்துவ நேர்முகம்- உடற்கூறியல், முதலுதவி, அடிப்படை செவிலியர் பணி தொடர்பானவை 3. மனிதவளத் துறையின் நேர்முகம்
தேர்வு செய்யப்பட்டவர்கள் 50 நாட்களுக்கு முழுமையான வகுப்பறை பயிற்சி, மருத்துவமனை மற்றும் ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சிகளும் அளிக்கப்படும். பயிற்சிக்காலத்தில் தங்கும் வசதி மற்றும் தினசரி உணவுக்கான ரூ.100/- படியும் வழங்கப்படும்.
மேலும் விவரம் அறிய விரும்புவோர் 044-28888060 என்ற தொலைபேசி எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி தொடர்ப்பு கொள்ளலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive