பண பரிவர்த்தனை, மிகக் குறைவாக உள்ள, ஏ.டி.எம்., களை, இரவு நேரங்களில் மூட,
வங்கிகள் நடவடிக்கை எடுத்து உள்ளன.
பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு செலவு
குறைப்பு ஆகிய காரணங்களால், இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக, வங்கிவட்டாரங்களில் கூறப்படுகிறது. பெங்களூரில், ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுத்துக் கொண்டிருந்த, வங்கி பெண்
அதிகாரியை, அடையாளம் தெரியாத நபர், கொலை செய்ய முயற்சித்தார். இதில்,
படுகாயம் அடைந்த அந்த பெண் அதிகாரி, உடல் நலம் தேறி வருகிறார்.
ரிசர்வ் வங்கி உத்தரவு:
இந்த சம்பவம் நாடெங்கும், வங்கி வாடிக்கையாளர்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. மேலும், ஏ.டி.எம்., மையங்களின் பாதுகாப்பு குறித்து, ரிசர்வ் வங்கி புதிய நடைமுறைகளை அறிவித்தது.
இதன்படி,
*ஏ.டி.எம்., மையத்தில் உயர்ரக கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்.
*24 மணி நேர பாதுகாவலரை நியமிக்க வேண்டும்.
*ஏ.டி.எம்., மையத்தின் கதவு மற்றும் சுற்றுப்புறம் பொருத்தப்படும் கண்ணாடிகளை, வெளியில் இருந்து பார்த்தால், உள்ளே இருப்பவர் தெரியும் படிஅமைக்க வேண்டும்.
*அவசர காலங்களில் உதவிக்கு அழைக்க, அலாரம் பொருத்த வேண்டும்.
*ஆயுதம் ஏந்திய காவலர்களை இரவு நேரங்களில் நியமிக்க வேண்டும்.இவ்வாறு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.
ஆனால், இந்த நடைமுறைகளை, எந்த வங்கியும் முழுமையாக கடைபிடிக்கவில்லை. இந்நிலையில், இரவு நேரங்களில், போதியளவு பண பரிவர்த்தனை இல்லாத ஏ.டி.எம்.,களையும், நகரின் ஒதுக்கு புறத்தில் உள்ள ஏ.டி.எம்.,களையும் மூட, தனியார் வங்கிகள் முடிவு செய்து, இதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளன.சிட்டி யூனியன் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி போன்ற தனியார் வங்கிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன. இந்த வங்கிகளின் ஏ.டி.எம்., மையங்களில், 'இரவு, 10:00 மணி முதல், காலை, 6:00 மணி வரை, ஏ.டி.எம்., மையங்கள் மூடப்படும்' என, அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.
பரிவர்த்தனை குறைவு:
இதுகுறித்து, வங்கி நிர்வாகம் கூறியதாவது;ஏ.டி.எம்., மையங்களுக்கு மின்சாரம், பாதுகாவலர் மற்றும் பிற பராமரிப்புப் பணிகளுக்கு மாதம், 40 - 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. இரவு நேரங்களில், சில ஏ.டி.எம்., மையங்களில், ஒன்றிரண்டு பண பரிவர்த்தனை தான் நடக்கின்றன.ஒருஏ.டி.எம்., மையத்தில் குறைந்தபட்சம், 50 பணவர்த்தனை நடந்தால் தான், பராமரிப்புக்கும் செலவுக்கு ஏற்ப, வங்கிக்கு வருவாய் கிடைக்கும். ஒன்றிரண்டு பரிவர்த்தனைகளால், நஷ்டம் தான் ஏற்படும். எனவே, இந்த ஏ.டி.எம்., மையங்களை இரவு நேரங்களில் மூட நடவடிக்கை எடுத்துள்ளோம்.இவ்வாறு, வங்கி நிர்வாகம் கூறியது.
அறிவுறுத்த முடியாது:
ஏ.டி.எம்., மையங்களின் பாதுகாப்பு குறித்து போலீசார் கூறியதாவது: ஏ.டி.எம்., மையங்களுக்கு, வங்கி நிர்வாகம் தான் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதுகுறித்து, ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ள பாதுகாப்பு நடைமுறைகளை அமல் செய்ய வேண்டும். 'ரிசர்வ் வங்கி நடைமுறைகளை அமல் செய்ய வேண்டும்' என, வங்கிகளுக்கு நாங்கள் அறிவுறுத்த முடியாது. எனவே, ஏ.டி.எம்., மையங்களை மூடும் முடிவு, வங்கி நிர்வாகத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...