பெண்கள் மற்றும் முதியோர் ஆபத்து காலத்தில்
காவல் துறை, மருத்துவர், உறவினர்கள் ஆகியோரை உதவிக்கு அழைக்க மொபைல்
அப்ளிகேஷன் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. “ரெஸ்க்யூ மீ” (RESCUE ME) என்ற
இந்த அப்ளிகேஷனை சென்னையை சேர்ந்த சஞ்சீவி என்ற பொறியியல் மாணவர்
உருவாக்கியுள்ளார்.
ஆண்டிராய்டு வசதி கொண்ட செல்ஃபோனில் இந்த
அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து வால்யூம் மற்றும் பவர் பொத்தான்களை
அழுத்துவதன் மூலம் பிறரை தொடர்பு கொள்ள முடியும்.
இலவசமாக கிடைக்கும் இவ்வசதி மூலம், தான்
இருக்கும் இடத்தை மற்றவர்களுக்கு தெரிவிப்பது உள்ளிட்ட வேறு பல வசதிகளும்
கிடைக்கின்றன. இந்த அப்ளிகேஷனை எப்படி பயன்படுத்துவது என்ற விவரங்கள்
அதற்குள்ளேயே இடம் பெற்றுள்ளன.
very good and need invention......congrats......
ReplyDelete