பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 28.12.2013 அன்று காலை 9.00 மணிக்கு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசாணை (நிலை) எண்.249, பக(எஸ்.எஸ்.ஏ2) துறை, நாள் 09.12.2013. அரசாணையின்படி, அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வரும் வட்டார வளமையங்களில் முதுகலை ஆசிரியர் பணிநிலையில் பணிபுரிந்து வரும் மேற்பார்வையாளர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர் பணிநிலையில் பணிபுரிந்துவரும் ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு அரசு மேல்நிலைப்பள்ளிகளுக்கு முதுகலை ஆசிரியர்களாக மாறுதல் ஆணை வழங்கப்பட வேண்டியுள்ளது. இதன்படி முதுகலை ஆசிரியர் பணி நிலையில் பணிபுரிந்து வரும் 44 மேற்பார்வையாளர்கள் மற்றும் 19 ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு மட்டும் முதுகலை ஆசிரியர் பணிக்கு மாறுதல் ஆணை வழங்குவதற்கான கலந்தாய்வு 28.12.2013 அன்று காலை 9.00 மணிக்கு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் நடத்தப்படவுள்ளது.
இதனைத் தொடர்ந்து 28.12.2013 அன்றே 01.01.2013
நிலவரப்படி முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு வெளியிடப்பட்டுள்ள தகுதி
வாய்ந்தோர் பட்டியலில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு கீழ்க்கண்ட விவரப்படி
முதுகலை ஆசிரியர் பணிக்கு பதவி உயர்வு வழங்குவதற்கான கலந்தாய்வு
நடத்தப்பட்டு ஆணைகள் வழங்கப்பட உள்ளது.
1. தமிழ் வரிசை எண் 1 முதல் 153வரை
2. ஆங்கிலம் வரிசை எண் 1 முதல் 102 வரை
3. கணிதம் வரிசை எண் 1 முதல் 102 வரை
4. இயற்பியல் வரிசை எண் 1 முதல் 86 வரை
5. வேதியியல் வரிசை எண் 1 முதல் 105 வரை
6. தாவரவியல் வரிசை எண் 1 முதல் 37d வரை
7. விலங்கியல் வரிசை எண் 1 முதல் 41 வரை
8. வரலாறு வரிசை எண் 1 முதல் 116 வரை
9. பொருளியல் வரிசை எண் 1 முதல் 95 வரை
10. வணிகவியல் வரிசை எண் 1 முதல் 56 வரை
11. புவியியல் வரிசை எண் 1 முதல் 02
12. அரசியல் அறிவியல் வரிசை எண் 1 முதல் 12 வரை
13. உ.க.இ.நிலை-வரிசை எண் 1 1 முதல் 23 வரை
கலந்தாய்வு 28.12.2013 அன்று காலை 9.00
மணிக்குத் தொடங்கி முதலில் முதுகலை ஆசிரியர் நிலையில் உள்ள வட்டார வளமைய
மேற்பார்வையாளர்/ஆசிரியர் பயிற்றுநர் பணியிலிருந்து அரசு மேல்நிலைப்பள்ளி
முதுகலை ஆசிரியராக மாவட்டத்திற்குள் மாறுதலும், அதனைத் தொடர்ந்து மாவட்டம்
விட்டு மாவட்டம் மாறுதலும், அதனைத் தொடர்ந்து முதுகலை ஆசிரியர்
காலிப்பணியிடங்களுக்கு 01.01.2013 நிலவரப்படியான முன்னுரிமைப் பட்டியலில்
உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு முன்னுரிமைப்படி பணிமாறுதல் மூலம் பதவி
உயர்வும் வழங்கப்படவுள்ளது.
முதுகலை ஆசிரியர் பணி நிலையில் பணிபுரியும்
வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்/ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் மேற்படி
முன்னுரிமைப் பட்டியலில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் இக்கலந்தாய்வில்
கலந்துகொள்ள பள்ளிக்கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத்திற்குள்
நடைபெறும் கலந்தாய்வு முடிக்கப்பட்ட பின்னரே மாவட்டம் விட்டு மாவட்டம்
கலந்தாய்வுத் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
47மேற்பார்வையாளர்கள் (முதுகலை ஆசிரியர் நிலையில் உள்ளவர்கள்) முதுகலை ஆசிரியர் பதவிக்கு பணியிட மாற்றம் மற்றும் 897 பட்டதாரி ஆசிரியரிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 28.12.13 அன்று நடைபெற உள்ளது
47மேற்பார்வையாளர்கள் (முதுகலை ஆசிரியர்
நிலையில் உள்ளவர்கள்) முதுகலை ஆசிரியர் பதவிக்கு பணியிட மாற்றம் ஆன்லைன்
கலந்தாய்வு 28.12.2013 அன்று காலை 9மணிக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை
கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெறும் என்றும்,
அதை தொடர்ந்து 897 பட்டதாரி
ஆசிரியர் பதவியில் இருந்து முதுகலை ஆசிரியர் பணியிடத்திற்கான பதவி உயர்வு
கலந்தாய்வு நடைபெற உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
Intha BT Vaccancy 961, 2013 BT Vaccancy 12922 udan serkapaduma
ReplyDeleteIntha BT Vaccancy 961, 2013 BT Vaccancy 12922 udan serkapaduma ,TET pass ana varkal nerapa paduvarkala
ReplyDeleteI got appointment order.I got TET score in chemistry 49.But in I have worked in Zonal Deputy Thasilthar in nellai dist. Nan enne seivathu endu teriyavillai.
ReplyDelete