கண் இமைப்பின் மூலம் கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டில் பல்பு, டிவி, பிரிட்ஜ்,
பேன்களை இயங்க செய்யும் புதிய மின் "சர்க்யூட்"டை கண்டுபிடித்து கலசலிங்கம்
பல்கலை மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இதை கண்டு பிடித்த மின்னியல், மின்னணுவியல் துறை இறுதியாண்டு பி.டெக்
மாணவர்களான ராம்பிராஷாந்த், சபரீஷ், சஞ்சய் காந்தி கூறியதாவது: "கண்களின்
இமைப்பதன் மூலம் கம்ப்யூட்டரை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அதை "வெப்
கேமரா"வில் பதிவு செய்து அதன் மூலம் வீட்டிலுள்ள மின்சார பல்பு, டிவி,
பிரிட்ஜ், பேன்களை ஆப், ஆன் செய்ய முடியும்.
வலது கண் இமைப்பை வலது புற "மவுஸ்" பட்டனாகவும், இடது கண் இமைப்பை இடது புற
"மவுஸ்" பட்டனாகவும், இரண்டு கண்களையும் இரண்டு முறை இமைத்தால், "டபிள்
கிளிக்"காவும் பயன்படுத்தி கம்ப்யூட்டரில் "விஸ்வல் பேசிக்" மூலமாக, இந்த
ஆணை புதிய மின்சார சர்க்யூட்டிற்கு செல்லும் இதில் எவ்வித "சென்சாரு"ம்
பயன்படுத்தவில்லை. பின்பு சர்க்யூட்டிலிருந்து "ரிலே" மூலமாக மின்சார
உபகரணங்கள் பல்பு, பேன், பிரிட்ஜ் இவற்றை ஆன், ஆப் செய்யலாம்.
கண் இமைப்பு "கிரேடிபிரிடிக்சன் அல்காரிதம்" விதிமுறைப்படி
இயக்கப்படுகிறது. இது மாற்றுத்திறனாளிகள் இருந்த இடத்திலேயே மின்சார
உபகரணங்களை இயக்க வைக்க முடியும். இந்த புராஜக்ட், தமிழ்நாடு அறிவியல்
ஆராய்ச்சி கழகத்திற்கு காப்புரிமை பெறுவதற்காக விண்ணப்பிக்கப்பட்டுள்ளது,
என்றனர்.
மாணவர்களையும், உதவி புரிந்த துறை தலைவர் கண்ணன், பேராசிரியர் ராம்குமாரை ,
பல்கலை தலைவர் கலசலிங்கம், வேந்தர் ஸ்ரீதரன், துணை வேந்தர் சரவணசங்கர்,
பதிவாளர் வாசுதேவன், துணை பதிவாளர் குருசாமி பாண்டியன் பாராட்டினர்.
Great and congrats to the team
ReplyDelete