தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக, தொழில்நுட்ப
உதவியுடன் வேலை பார்த்து வரும் நபர்களுக்கு வேலை பார்க்கும் இடத்தை
தங்களுக்கு பிடித்த இடமாக மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு அதிகரித்திருக்கிறது.
தற்போது பல நிறுவனங்கள் தங்கள் அலுவலர்கள்
மகிழ்ச்சிகரமாக இயங்குவதற்கு வசதியாக, அலுவலகத்திற்கு வந்துதான் வேலை
பார்க்க வேண்டும் என்ற நிலையை மாற்றுவதற்கான திட்டங்களை குறிப்பிடத்தக்க
அளவில் உருவாக்கி வருகின்றன.
ஒரு ஆய்வறிக்கையின்படி, சிறு குழந்தைகளுடன்
இருக்கும் பெண்களுக்கு கிடைக்கும் நேரத்தை விட பிற பெண்களுக்கு அதிகமான
ஓய்வு நேரம் கிடைக்கும். அதே போன்று 40 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட ஆண்கள்
வாரத்திற்கு 50 மணி நேரம் உழைப்பவர்களாக உள்ளனர். பிறர் குறைவான நேரமே வேலை
பார்க்கின்றனர். 5பேரில் ஒருவர் தங்களது வயது முதிர்ந்த பெற்றோரை
கவனிப்பவர்களாக உள்ளனர். வருங்காலங்களில் இது இன்னும் அதிகரிக்கலாம் என
ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இது போன்று ஓவ்வோருவருக்கும் உள்ள கடமைகள்
மாறுபடும்பொழுது, கிடைக்கக்கூடிய நேரமும் வித்தியாசப்படுகிறது.
பணிச்சூழலைப் பொறுத்த அளவில், தற்போது இருக்கும் இளம் தலைமுறையினர் 2025ஐ
நெருங்கும்பொழுது வேலைவாய்ப்புச்சந்தையை 75 சதவிகிதம் தங்களதாக்கிக்
கொள்வர்.
இத்தகைய நிலவரத்தில், நெகிழ்வான பணியிட
விவகாரம் என்பது ஒரு நிறுவனத்தின் அதிமுக்கிய முடிவாகத்தான் இருக்க
முடியும். ஏனெனில் இது நிறுவனத்தின் வளர்ச்சி, வீழ்ச்சியை
நிர்ணயிக்கக்கூடிய ஒரு காரணியாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். இது
ஒரு தொழில்நுட்பம் சார்ந்த ஒன்றாக இருந்தாலும், நிர்வாக நிலை
சம்பந்தபட்டதாகும்.
பணியாளர்கள் தாங்கள் விருப்பப்படும் இடத்தில்
வேலை பார்க்கும்பொழுது, தங்கள் மேலதிகாரிகளின் கோபப் பார்வையிலிருந்து
விலகி இருக்கலாம். ஆனால் அதே நேரம் இரவு நேரத்தில் அவர்களிடமிருந்து வரும்
மின்னஞ்சல் அவர்களை கவலைக்குள்ளாக்க வாய்ப்புகள் அதிகம்.
முன்னணி நிறுவனங்கள், வேலைச்சூழலை
மாற்றுவதற்கான அவசியத்தை உணர்ந்தாலும், அனைத்து விதமான வேலைக்கும் இம்முறை
ஒத்து வராது என்பதனை உணர்ந்திருக்கின்றனர். எனவே வேலைக்கு தகுந்தவாறு
எல்லைகளை நிர்ணயிப்பது அவசியமாகிறது. ஊழியர்கள் எதிபார்ப்பதற்கு ஏற்ற
வகையிலும் திட்டங்களை தீட்ட வேண்டியுள்ளது.
புதிய வழிமுறைகளை உருவாக்கும்பொழுது
நிர்வாகிகள், புதிய நிர்வாக முறைகளை கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது.
எப்படி ஓவ்வோரு ஊழியரையும் தொடர்பு கொள்வது? வேலை வாங்கும் விதம், ஓவ்வொரு
குழுவுக்கும் இடையே தொடர்புகளை சரியான முறையில் பராமரித்தல் போன்றவையும்
இதில் அடங்கும்.
பணியாளர்களுக்கு நல்லதாக இருப்பது,
நிறுவனத்திற்கும் நல்லதாகவே இருக்கும் என்ற நிலைப்பாடு நிறுவனத்திற்கிடையே
உள்ளது. பணியாளர் தான் குறிப்பிட்ட சூழலில் திறம்பட இயங்க முடியும் என்று
மனதளவில் எண்ணும்பொழுது வேலைத் திறன் அதிகமாகிறது, இதன் மூலம் பணிகள்
விரைவாக முடிவதுடன், நிறுவனமும் லாபத்தை விரைவாக காண முடியும் என்பதே
நிறுவனங்களின் கணிப்பு ஆகும்.
Very interesting article.Waiting to see all those changes. Thaks paada saalai
ReplyDelete