கல்வி வளர்ச்சியில் வட மாநிலங்களை விட, தென் மாநிலங்கள் சிறப்பான இடத்தில்
இருப்பதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
தர வரிசையில்,
லட்சத்தீவுகள், புதுச்சேரி, தமிழ்நாடு முறையே, முதல் மூன்று இடங்களை வகிக்கின்றன. மத்திய அரசின் கீழ் டில்லியில்
இயங்கும், திட்டமிடுதல் மற்றும் நிர்வாக தேசிய பல்கலைக்கழகம் சார்பில்
மாவட்டவாரியாக இ.டி.ஐ., (எஜூகேஷன் டெவலப்மென்ட் இண்டக்ஸ்) விபரம்
சேகரிக்கப்பட்டது. கல்வியின் வளர்ச்சி பற்றிய இக்கணக்கீட்டின்படி, பல
மாநிலங்கள் முன்னேற்றம் இன்றி, முந்தைய ஆண்டுகளின் நிலையையே தொடர்ந்துள்ளன.
குறிப்பாக இந்தி மொழி பேசும் மாநிலங்களில், கல்வி வளர்ச்சி அதிகம்
சரிந்துள்ளது.
அதேவேளையில் கல்வி உரிமை சட்டம் வந்த பிறகு, தென் மாநிலங்கள் விரைவான வளர்ச்சியை கண்டுள்ளன. இதன்படி அணுகுமுறை, உள்கட்டமைப்பு வசதி, ஆசிரியர்கள் மற்றும் திறமை வெளிப்பாடு ஆகியவை மேம்பட்டுள்ளன. இருப்பினும், பீகார், உ.பி., மற்றும் சில மாநிலங்கள் முயற்சி செய்தும், அதில் வெற்றி பெற முடியவில்லை. மாவட்ட பள்ளிக் கல்வி தகவல்களின் அடிப்படையில், அடிப்படை மற்றும் மேல்கல்வி முறைகளில், லட்சத்தீவுகள் முதலிடம் வகிக்கிறது. இரண்டாவது இடத்தில் புதுச்சேரியும், அதற்கடுத்தடுத்த இடங்களில் தமிழ்நாடு, சிக்கிம், கர்நாடகாவும் வருகின்றன.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...