பிறந்த நாள் போன்ற விழாக்களில், கேக்கின் மீது மெழுகுவர்த்தியை ஏற்றி,
அணைப்பதற்கு, தடை விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. லோக்சபாவில்,
நேற்று முன்தினம், எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய சுகாதாரத் துறை
அமைச்சர், குலாம் நபி ஆசாத் அளித்த பதில்:
ஆஸ்திரேலியாவில், கேக் மீது வைக்கப்பட்ட, எரியும் மெழுகுவர்த்தியைஅணைக்கும்
போது, அதில் இருந்து விழும் துகள்களால், நோய் ஏற்படுவதாகக்
கண்டறிந்துள்ளனர். அதையடுத்து, கேக் மீது, மெழுகுவர்த்தியை அணைக்க தடை
விதிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டின், தேசிய சுகாதாரம் மற்றும் மருத்துவ
ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது. மேலும், பிறந்த நாள் போன்ற விழாக்களுக்கு,
'கப் கேக்' வழங்கவும் உத்தரவிட்டு உள்ளது.
Good rules
ReplyDelete