கல்லூரி ஆசிரியர் பணிக்காக எழுதப்படும் நெட்
தேர்வு, தற்போது பொதுத்துறை நிறுவனங்களில் பணி வாய்ப்புகளைப் பெறுதவற்கும்
பயன்படும்.
UGC, தனது நெட் முடிவுகள் தரவு தளத்தை(database), பொதுத்துறை
நிறுவனங்கள் பயன்படுததிக் கொள்ள அனுமதி வழங்க முடிவு செய்துள்ளது.
இதன்மூலம் முதுநிலை பட்டதாரிகள் பயன்பெற முடியும்.
இதற்கு அனுமதியளிக்கும் தனது கடிதத்தை Indian
Oil நிறுவனத்திற்கு முதன்முதலாக UGC அளித்துள்ளது. இதன்பின்னர், இதர
பொதுத்துறை நிறுவனங்களும் இந்த நடைமுறையைப் பின்பற்றும். இத்தகைய
நடவடிக்கைகளின் மூலமாக, நெட் தேர்வு இன்னும் பிரபலமடையும்.
Indian Oil நிறுவனம், கடந்த 2010ம் ஆண்டு முதல்
GATE தேர்வு மதிப்பெண்களை பயன்படுத்தி ஆட்களை பணிக்கு அமர்த்த தொடங்கியது.
மேலும், CLAT தேர்வு மதிப்பெண்களின் மூமாக, சட்டப் பட்டதாரிகளையும்
பணிக்கு அமர்த்தியது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...