பணி நிரந்தரம் செய்வதற்கு முன்பு மரணம் அடைந்த வனத்துறை ஊழியரின் மகனுக்கு
கருணை அடிப்படையில் வேலை வழங்க மறுத்த தமிழக அரசின் உத்தரவை சென்னை
ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது.திருவண்ணாமலை மாவட்டத்தை
சேர்ந்தவர் சி.காசியம்மாள்.
இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில்கூறியிருப்பதாவது:–
தற்காலிக பணியாளர் என் கணவர் சின்னப்பா, கிராம சமூக வனத்துறை ஊழியராக,
தொகுப்பூதியம் பெற்று 25 ஆண்டுகளாக பணியாற்றினார். இந்த நிலையில், தமிழகம்
முழுவதும் வனத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும்3,058
தற்காலிக ஊழியரை பணி நிரந்தரம் செய்ய தமிழக அரசு 1999–ம் ஆண்டு
உத்தரவிட்டது. இதனடிப்படையில், பணி மூப்பு பட்டியல்தயாரிக்கப்பட்டது.
அதில், என் கணவரின் பெயர் 1002–வது இடத்தில் இருந்தது. இந்த நிலையில், பணி
நிரந்தரம் செய்வதற்கு முன்பே, அதாவது 13–3–2007 அன்று இதயநோய் காரணமாக என்
கணவர் இறந்துவிட்டார். வேலை வழங்க முடியாது இதையடுத்து என் மகனுக்கு கருணை
அடிப்படையில் வாரிசு வேலை வழங்குமாறு தமிழக தலைமை வனப்பாதுகாவலர் மனு
கொடுத்தேன். அவர் வேலை வழங்க மறுத்துவிட்டார். இதை எதிர்த்து, நான்
தொடர்ந்த வழக்கை விசாரித்த இந்த ஐகோர்ட்டு, வாரிசு வேலைக் கேட்டு கொடுத்த
மனுவை சட்டப்படி பரிசீலிக்கும்படி உத்தரவிட்டது.சேர்ந்தவர் சி.காசியம்மாள்.
இந்த உத்தரவின் அடிப்படையில் பரிசீலனை செய்த தலைமை வனப்பாதுகாவலர், மீண்டும் என் கோரிக்கையை நிராகரித்து, 11–10–2011 அன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். அந்த உத்தரவில், என் கணவர் பணி நிரந்தரம் செய்வதற்கு முன்பே இறந்து விட்டதால்,தற்காலிக ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை வேலை வழங்க முடியாது என்றும் கூறியுள்ளார்.. என் மூத்த மகன் சி.சிவாவுக்கு கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்க தலைமை வனப்பாதுகாவலருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை நீதிபதி எம்.வேணுகோபால் விசாரித்து பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–
மனுதாரர் தன் குடும்பம் வறுமையில் உள்ளதாகவும், தன்பிள்ளைகள் யாரும் அரசு
வேலையில் இல்லை என்றும் அதனால் 32 வயதான தன் மகனுக்கு கருணை அடிப்படையில்
வேலை வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். ஆனால், பணி நிரந்தரம்
செய்வதற்கு முன்பு இறந்து விட்டதால்,அவரது வாரிசுக்கு வேலை வழங்க முடியாது
என்று வனத்துறை சார்பில் கூறப்படுகிறது. வாரிசு வேலை பெற முடியும்
லட்சுமிதேவி என்பவர் தொடர்ந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த
தீர்ப்பில், தற்காலிக ஊழியர் நீண்ட நாட்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல்
இருக்கும்போது, அவர் இறந்து விட்டதால், அவரது வாரிசுகள் கருணை அடிப்படையில்
வேலை பெற முடியும் என்று கூறியுள்ளது. அதேபோல, ரமணி என்பவர் தொடர்ந்த
வழக்கை விசாரித்த இந்த ஐகோர்ட்டின் டிவிஷன் பெஞ்ச், 10 ஆண்டுகளுக்கு மேலாக
பணியாற்றிய தற்காலிக பணியாளரின் மனைவி ரமணிக்கு கருணை அடிப்படையில் வேலை
வழங்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில், மனுதாரரின் கணவர் 25 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி உள்ளார். எனவே இவரது மகனுக்கு வாரிசு வேலை வழங்க மறுத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்கிறேன். கருணை அடிப்படையில் தன் மகனுக்கு வாரிசு வேலை கேட்டு மனுதாரர் காசியம்மாள் கொடுத்த மனுவை தலைமை வனப்பாதுகாவலர் மீண்டும் பரிசீலித்து தகுந்த உத்தரவினை பிறப்பிக்கவேண்டும். அப்போது, காசியம்மாளின் குடும்ப சூழ்நிலை, பொருளாதாரநிலை ஆகியவற்றையும் கருத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும். இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.
இந்த வழக்கில், மனுதாரரின் கணவர் 25 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி உள்ளார். எனவே இவரது மகனுக்கு வாரிசு வேலை வழங்க மறுத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்கிறேன். கருணை அடிப்படையில் தன் மகனுக்கு வாரிசு வேலை கேட்டு மனுதாரர் காசியம்மாள் கொடுத்த மனுவை தலைமை வனப்பாதுகாவலர் மீண்டும் பரிசீலித்து தகுந்த உத்தரவினை பிறப்பிக்கவேண்டும். அப்போது, காசியம்மாளின் குடும்ப சூழ்நிலை, பொருளாதாரநிலை ஆகியவற்றையும் கருத்தில் எடுத்துக்கொள்ளவேண்டும். இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...