பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடத்தப்படும் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுத்தேர்வுகளில் திருத்தப்பட்ட விடைத்தாள்கள் குறிப்பிட்ட ஆண்டுகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பது வழக்கம்.
இப்படி பாதுகாத்து வைக்க கல்வித் துறைக்கு போதிய சொந்த குடோன் வசதி கிடையாது.இதனால், கல்வி மாவட்டம் வாரியாக 3 அல்லது 4 பெரிய தனியார் பள்ளிகளை நோடல் சென்டராக தேர்வு செய்கின்றனர். அந்த பள்ளிகளில் விசால மாக, உறுதியான, பாதுகாப்பான வகுப்பறைகளை தேர்வு செய்து, அதை தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என கல்வித்துறையினர் வலுக்கட்டாயமாக கேட்டுப் பெறுகின்றனர்.
பின்னர், அந்த வகுப்பறைகளில் திருத்தப்பட்ட விடைத்தாள்களை பூட்டி சீல்
வைத்து சாவியை வாங்கி சென்று விடுகின்றனர். இவ்வாறு பூட்டப்பட்டு கிடக்கும்
வகுப்பறைகளில் குறிப்பிட்ட காலம் வரை வகுப்புகள் நடத்த முடிவதில்லை.
மேலும், குறிப்பிட்ட காலம் கடந்த பின்னரும், விடைத்தாள்களை அகற்ற
கல்வித்துறை நடவடிக்கை எடுப்பதில்லை. இதன் காரணமாக வகுப்பறைகள் பாழாவதுடன்,
அந்த அறை மாணவர்களுக்கு பயன்படாமல் போகிறது. நெல்லை மாவட்டத்தில் பாளை
உள்பட சில இடங்களில் இவ்வாறு பல தனியார் பள்ளிகளின் வகுப்பறைகள்,
திருத்தப்பட்ட விடைத்தாள்களால் முடங்கிக் உள்ளன.
இவற்றை இன்று வரை அகற்றப்படாத நிலையில் வரும் மார்ச், ஏப்ரல் மாதங்களில்
நடைபெற உள்ள 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுத் தேர்வுக்காக மாணவர்களுக்கு
வழங்க உள்ள புதிய விடைத்தாள்களை பாதுகாப்பாக வைக்க இடம் தேடி பள்ளி
கல்வித் துறையினர் சுற்றி வருகின்றனர். ஏற்கனவே, பல வகுப்பறைகள் மூடப்பட்டு
கிடக்கும் பள்ளிகளில், இவற்றை யும் வைக்க அதிகாரிகள் முயற்சிப்பதாக,
தனியார் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
‘நோடல் பாயின்ட் சென்டர்’ என்ற ஒரே பெயரில் இவ்வாறு பள்ளி வகுப்பறைகளை
தொடர்ச்சியாக வாங்குவதால் மாணவர்களுக்கு மரத்தடியில் வைத்து வகுப்புகள்
நடத்த வேண்டிய நிலை தொடர்கிறது. மழை காலங்களில் மரத்தடியில் கூட வகுப்புகளை
நடத்த முடியாத நிலை தொடர்கிறது. எனவே கல்வி மாவட்டம் வாரியாக குடோன்களை
அரசு ஏற்படுத்தி அங்கேயே பாதுகாப்பாக விடைத்தாள்களையும், சைக்கிள் உள்ளிட்ட
கல்வி இலவச உப பொருட்களை யும் வைத்துக்கொள்ள முன்வரவேண்டும்‘ என தலைமை
ஆசிரியர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...