Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உதவிப் பேராசிரியர் நியமனத்துக்கான நேர்காணல் எப்போது?


      அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளில் மொத்தம் 1,063 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். 
 
        இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு சென்னையில் 3 மையங்களில் நடைபெற்றது. சென்னையில் அண்ணாசாலையில் உள்ள காயிதே மில்லத் மகளிர் கல்லூரி, நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரி, காமராஜர் சாலையில் உள்ள லேடி வெலிங்டன் கல்வியியல் நிறுவனம் ஆகியவற்றில் நவம்பர் 25 முதல் டிசம்பர் 6 வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற்றது.இந்த சான்றிதழ் சரிபார்ப்புக்காக 14,600 பேர் அழைக்கப்பட்டிருந்தனர்.இவர்களில் 22 சதவீதம் பேர் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கவில்லை என சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவித்தன. இதுதொடர்பாக, அந்த வட்டாரங்கள் மேலும் கூறியது: சான்றிதழ் சரிபார்ப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் 1:5 என்ற விகிதத்தில் தேர்வர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

          சான்றிதழ் சரிபார்ப்பில் உரிய கல்வித் தகுதிக்குப் பிறகானபணி அனுபவத்துக்கு ஆண்டுக்கு 2 மதிப்பெண் வீதம் அதிகபட்சம் 15மதிப்பெண் வரை வழங்கப்படும். கல்வித் தகுதிக்கு அதிகபட்சமாக 9 மதிப்பெண் வழங்கப்படும். பி.எச்டி. படிப்புக்கு 9 மதிப்பெண்ணும், எம்.பில் மற்றும்நெட் அல்லது ùஸட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 6 மதிப்பெண்ணும்,முதுநிலைப் பட்டம் மற்றும் நெட் அல்லது SET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு 5 மதிப்பெண்ணும்வழங்கப்படும். மொத்தம் 24 மதிப்பெண்ணுக்கு தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில்நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.இதற்கிடையில் தமிழ்வழியில் பட்டம் பெற்றவர்களுக்கான 20 சதவீத உள் ஒதுக்கீடு குறித்து சில தெளிவுரைகளை டிஆர்பி அரசிடம் கோரியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தெளிவுரை பெறப்பட்டபின்னர் அதனடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்பட்டு நேர்காணல் நடைபெறும் எனத் தெரிகின்றதுநேர்முகத் தேர்வு 10 மதிப்பெண்ணுக்கு நடைபெறும். சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் மொத்தம் 34 மதிப்பெண்ணுக்கு தேர்வர் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் இருக்கும்.நேர்முகத் தேர்வு பெரும்பாலும் ஜனவரி மாதம் இருக்கும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.




4 Comments:

  1. sir, TNTET 2013 pass candidates -ku cv eppo thaan sollunga......
    result vandhu 2 months aagapogudhu..... last yearla result vandhu 1 monthla posting pottanga.... aana ippo nilamai vera mathiri irukku.....ennai pola 27000 candidates life-a yosinga....

    ReplyDelete
  2. 2006 யில் எம்.பில் ( Regular )முடித்திருந்தால் நெட் அல்லது SET தேவையா என்ற கேள்விக்கு பதில் தெரிந்தவர்கள் சொல்லவும்

    ReplyDelete
  3. you need either a SET/NET/P.hD

    ReplyDelete
  4. டி.ஆர்.பி இந்த பணி நியமனங்களை முடிக்க குறைந்தது 10 வருடங்கள் ஆகும்!.அவ்வளவு சுறுசுறுப்பாக செயல் படுகிறது!

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive