மொபைலில் இண்டர்நெட் இல்லாமலேயே டுவிட்டரை பயன்படுத்தும் வசதி.
தற்போது டுவிட்டரை பயன்படுத்த வேண்டுமானால் இண்டர்நெட் கனெக்சன் தேவை. இதை
மேலும் எளிமைப்படுத்த டுவிட்டர் நிறுவனம் சிங்கப்பூரை சேர்ந்த ஒரு
நிறுவனத்துடன் சேர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. 140 எழுத்துகள் கொண்ட
வாசகங்களை ட்விட்டரில் இண்டெர்நெட் சேவை இல்லாமலேயே பதிவு செய்ய முயற்சி
நடந்துவருகிறது.ஏற்கனவே பேஸ்புக்குடன் இணைந்துள்ள யு2யோபியா மொபைல்
நிறுவனம் தற்போது ட்விட்டருடன் இணைந்து இச்சேவையை வழங்க உள்ளதாக தலைமை
நிர்வாகி சுமேஷ் மேனன் ராய்ட்டர் செய்திப்பிரிவுற்கு அளித்துள்ள தகவலில்
தெரிவித்துள்ளார்.
சிறிய கோட் நெம்பரை டயல் செய்தாலே ட்விட்டருக்குள் எளிதாக நுழைய
முடியும்.யு2யோபியா நிறுவனத்தின் மூலம் டேட்டா இணைப்பு இல்லாமலேயே
பேஸ்புக்கையும், கூகுள் டாக்கையும் 11 மில்லியன் சந்தாதாரர்கள் பயன்படுத்தி
வருகின்றனர் குறிப்பிடத்தக்கது. இச்சேவை தொடங்கப்பட்டால் செல்போன்
வைத்திருப்பவர்கள் ட்விட்டருக்குள் எளிதில் நுழைய முடியும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...