இந்திய அளவில், சிறப்பான முறையில் பள்ளிக் கல்வி வழங்கும் செயல்பாட்டில், லட்சத்தீவுகள் முதலிடம் பெறுகிறது.
பல்வேறு அம்சங்களைக் கொண்ட கல்வி மேம்பாட்டு
குறியீடு 2012-13ன் படி இந்த மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அணுகுதல்,
ஆசிரியர்கள், உள்கட்டமைப்பு மற்றும் பயன்விளைவு ஆகிய அம்சங்களின்
அடிப்படையில் இந்த மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும்
யூனியன் பிரதேசங்களுக்கும் தனித்தனியாக ரேங்க் வழங்கப்பட்டது.
மேற்குறிப்பிட்ட குறியீடு, மத்திய மனிதவள அமைச்சகம் மற்றும் கல்வி
திட்டமிடுதல் மற்றும் நிர்வாகத்திற்கான தேசிய பல்கலைக்கழகம் ஆகியவற்றால்
இணைந்து வெளியிடப்பட்டது.
லட்சத் தீவுகளுக்கு அடுத்து, புதுச்சேரி
இரண்டாமிடமும், தமிழகம் மூன்றாமிடமும் பெற்றுள்ளன. அதற்கடுத்த நிலைகளில்,
வடகிழக்கு மாநிலங்கள் வருகின்றன. இப்பட்டியலில் ஜார்க்கண்ட் மாநிலம் கடைசி
இடத்தைப் பிடித்துள்ளது.
வட இந்தியாவைப் பொறுத்தவரை, பஞ்சாப் முதலிடம் பிடித்துள்ளது. டெல்லி மாநிலம் 11வது இடத்தைப் பெற்றுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...