ஹோமிஜிஹாங்கீர் பாபா
(ஹெச்.ஜே.பாபா) ஒரு பணவசதி படைத்த பம்பாய் பார்ஸி வகுப்புக் குடும்பத்தில்
30.10.1909 இல் பிறந்தார்.
இந்தியத் தொழிலதிபர் டாடா குடும்பத்துடன்
உறவுடைய ஒரு குடும்பம் இது என்பர். படிப்பில் ஈடுபாடு கொண்ட பாபாவுக்கு
மேனாட்டு சங்கீதம் மற்றும் சித்திரம் தீட்டுதலிலும் பற்றுதல் இருந்து
வந்தது. இவருடைய தகப்பனார் இவருக்குப் பொறியியல் படிப்பு அளிக்க
விரும்பினார். ஆனால் பாபாவின் மனம் பெüதிகத் துறையை நோக்கிச் சென்றது.
படிப்பில் முன்னிலையில் நின்று, பதக்கங்களும் ஆராய்ச்சி மாணவத் தகுதியும்
பெற்றார். இவர் ஒரு பிரம்மசாரி. “”நான் முற்போக்கு ஆராய்ச்சியையே
மணந்துள்ளேன்” என அடிக்கடி நகைச்சுவையுடன் கூறுவார்.
1930 இல் இங்கிலாந்து
சென்று, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. பட்டமும், 1934 இல் டாக்டர்
பட்டமும் பெற்றார். 1939 இல் இரண்டாம் உலகப்போர் தொடங்கியது. 1940 இல்
இந்தியா திரும்பினார்.
1941 – 1942 இல், இவர்
பங்களூர் இந்திய விஞ்ஞான கேந்திரத்தில் பெüதிகத் துறை ஆராய்ச்சி, மற்றும்
விரிவுரையாளராகவும் பதவி வகித்தார். 1941 இல் இவர் இங்கிலாந்து ராயல்
சொசைடியின் அங்கத்தினராக நியமிக்கப்பட்டார்.
1942 – 1945 வரை, டாடா விண்வெளி ஆராய்ச்சி கேந்திரத்தில் பெüதிகத்துறை பேராசிரியராகப் பதவி வகித்தார்.
விண் உலகத்தின் தோற்றம், அதிலிருந்து வெளியாகும் ஒளிக்கதிர் பூஉலகத்தை
நோக்கி நெருங்கிவரும்போது, பூஉலகத்தைச் சுற்றிக் காணும் காற்றின் மீது மோதி
சிறுசிறு மாசுத் திவலைகளையும், எலெக்ட்ரான் மழையையும் உருவாக்குகின்றன
என்பது அவருடைய கருத்து. இந்த மழையில், ந்யூக்ளியர், மின் அணுக்களின்
தோற்றம் உருவாவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
மின் அணு ஆராய்ச்சி அவருடைய ஆராய்ச்சியின் ஒரு முக்கியப் பகுதியாகும்.
இதற்கென ஒரு தனி ஆராய்ச்சிக் கூடமே இந்தியாவில் அமைக்கப்பட வேண்டும்என்று
வாதாடினார்.
இவருடைய இந்த வேண்டுகோளை ஏற்று 1945 இல் டாடா அடிப்படை ஆராய்ச்சிக் கூடம்
ஒன்று, பம்பாயில் நிறுவப்பட்டது. 1942 – 1945 வரை, பாபா “”காஸ்மிக்ரே”
அதாவது வெண்வெளி வெளியிடும் ஒளிக்கதிர் வீச்சு ஆராய்ச்சிப் பகுதியில்
பேராசிரியராகவும், டாடா நிறுவனத்தின் இயக்குநராகவும் பதவிவகித்து வந்தார்.
இவருக்கு 1954 ல் பத்ம பூஷன் விருது கிடைத்தது.
1947 – 1966 வரை, அடாமிக் எனர்ஜி கமிஷனில் இருந்தார். 1954 & 1966 வரை
மத்திய அரசாங்கத்தின் அடாமிக் எனர்ஜி துறையின் காரியதரிசியாகவும் பணியாற்றி
வந்தார். 1957 இல் எடின்பரோ, ராயல் சொசைடியின் உறுப்பினராக
நியமிக்கப்பட்டார்.
பாபா அணுசக்தி ஆராய்ச்சியில் முழுவீச்சில் செயலாற்றத் தொடங்கினார்.
நேருவும் இவருக்கு ஆதரவு அளித்துவந்தார். இதன் காரணமாக அப்சரா, ûஸரஸ்,
ùஸர்லினா என்ற மூன்று அணுசக்தி ரியாக்டர் பட்டறைகள் உருவாக்கப்பட்டன. கச்சா
யுரானியம் உள்ள இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதை சுத்திகரிக்கும் ஆலைகளும்
நிறுவப்பட்டன.
1963 இல் தாராபூரில்
(மஹாராஷ்டிரா) அணுஆராய்ச்சி மின் உற்பத்தி நிறுவனம் துவக்கப்பட்டது. 1965
இல் புளூடோனியம் ஆலை ஒன்று திறக்கப்பட்டபோது, இது ஒரு பெரும் சாதனை என
பலராலும் பாராட்டப்பட்டது.
பாபா தன்னுடைய விஞ்ஞான
ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலம் இந்தியாவும் விஞ்ஞானத்தில் திறமை படைத்த நாடு,
அணு ஆராய்ச்சியிலும் அது முன்னணியில் உள்ளது என்பதை நிரூபித்துக்
காட்டினார்.
”ஆக்கப்பணிகளுக்கும் நலனுக்கும் அணுசக்தி” என்ற தலைப்பில் சர்வதேச
மகாநாட்டில் இவர் ஒரு பெரும் பங்கு ஏற்றார். இப்பணியில் வெளிநாட்டுக்கு
விமானம் மூலம் சென்ற பொழுது, விமானம் நொறுங்கி 24.1.1966 இல் தன்னுடைய 57
ஆம் வயதில் மரணமடைந்தார். உலகத் தலைவர்கள் பலரும், பல விஞ்ஞானிகளும்
இப்பெரும் துயரத்தில் பங்கு கொண்டனர்.
18.5.1974 அன்று ராஜஸ்தானிலுள்ள பொக்ரான் என்ற இடத்தில், இந்திய
விஞ்ஞானிகள் அணுஆயுதப் பரிசோதனையில் ஈடுபட்டனர். இது சமாதான முயற்சியில்
பரிசோதிக்கப்பட்டதாகும்.
1967இல் டிராம்பேயில், அணுசக்தி நிறுவனம் ஒன்று உருவாக்கப்பட்டபோது, அதை
பாபா அணுஆராய்ச்சி மையம் என்றே பெயரிட்டு பாபாவை கெüரவித்தனர். இவர் எழுதி
வெளியிட்ட நூல்கள், ”க்வாண்டம் தியரி”, காஸ்மிக் ரேடியேஷன்”, ”ஆரம்ப
பெüதித் திவலைகள்” அதாவது “”எலிமெண்டரி பிஸிகல் பார்டிகள்ஸ்” என்பனவாகும்.
உதகமண்டலத்தில் இவர் ரேடியோ டெலஸ்கோப் என்ற சாதனத்தை உருவாக்கினார்.
விண்வெளித் துறை ஆராய்ச்சி, மின்சக்திக் கருவிகள், ரேடியோ வானிலை ஆராய்ச்சி
மையம் முதலியவை இவருடைய முயற்சியினால் உருவாக்கப்பட்டவைகளாகும்.
அணு இயக்கத்தில் பெரும் ஈடுபாடு கொண்ட இந்திய விஞ்ஞானிகளில் மிகச் சிறந்தவர் ஹெச்.ஜே.பாபா!
Courtesy : http://thinkgovtjob.blogspot.in/
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...