கலை பட்டதாரிகளுக்கான நெட் தகுதித் தேர்வை பல்கலைக் கழக மானியக்குழு
(யு.ஜி.சி.) நடத்துகிறது. இதே போல் அறிவியல், கணித பட்டதாரி களுக்கான நெட்
தகுதித் தேர்வு சி.எஸ்.ஐ.ஆர். எனப்படும் மத்திய அறிவியல் தொழில் ஆராய்ச்சி
கவுன்சிலால் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான சி.எஸ்.ஐ.ஆர். நெட் தேர்வு
வருகிற 22-ம் தேதி சென்னை உள்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெற
உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்த வர்களுக்கு ஆன்லைனிலேயே ஹால்டிக்கெட்
வழங்கப்படுகிறது. ஆன்லைன் ஹால்டிக்கெட்டை www.csirhrdg.res.in
என்ற இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை (இன்று) முதல் பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம். இவ்வாறு பதிவிறக்கம் செய்யப்படும் ஹால்டிக்கெட்டில்
விண்ணப்பதாரரின் புகைப்படம் தெளிவாக இல்லாவிட்டால். அத்தகைய
விண்ணப்பதாரர்கள் 2 பாஸ்போர்ட் அளவு புகைப்ப டங்கள் மற்றும்
அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டைஆகியவற்றை தேர்வு மையத்துக்கு
எடுத்துச்செல்ல வேண்டும் என்று சி.எஸ்.ஐ.ஆர். அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...