பிட்ஸ் கல்வி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த முதல் டிகிரி படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, BITSAT - 2014 தேர்வு நடத்தப்படுகிறது.
ஒருங்கிணைந்த முதல் டிகிரி படிப்புகள்
பி.இ., ஹானர்ஸ், பி.பார்ம் ஹானர்ஸ்,
எம்.எஸ்சி., ஹானர்ஸ் மற்றும் எம்.எஸ்சி(டெக்) ஆகிய பிரிவுகளில் பல்வேறான
படிப்புகள் வழங்கப்படுகின்றன.
இளநிலைப் படிப்புகளில் சேர, முறையான வகையில்,
அங்கீகரிக்கப்பட்ட பள்ளி படிப்பை முடித்திருக்க வேண்டும் மற்றும் தேவையான
தகுதி மதிப்பெண்களையும் பெற்றிருக்க வேண்டும்.
அதேசமயம், பள்ளி அளவில், மாநில அல்லது மத்திய
கல்வி வாரியங்களில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, BITSAT 2014
தேர்வு மதிப்பெண்களை கணக்கில் எடுக்காமலேயே, அவர்கள் விரும்பும் இளநிலைப்
படிப்பில் நேரடி சேர்க்கை வழங்கப்படும்.
BITSAT 2014 தேர்வையெழுத விரும்பும் மாணவர்கள்
www.bitsadmission.com என்ற வலைத்தளம் சென்று, முறைப்படி விண்ணப்பிக்க
வேண்டும். இதற்கான கட்டணம் ரூ.1900 மற்றும் பெண்களுக்கு ரூ.1400.
ஆன்லைன் முறையில் நடைபெறும் BITSAT 2014 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கடைசித் தேதி மாலை 5 மணி, 15 பிப்ரவரி, 2014.
இது 3 மணிநேர தேர்வு. இது objective type அடிப்படையிலான கேள்விகளை கொண்ட தேர்வு.
இத்தேர்வு நடைபெறும் தேதிகள் - அடுத்தாண்டு மே மாதம் 14ம் தேதி முதல் 1ம் தேதி ஜுன் வரை.
தேர்வுக்கான பாடத்திட்டம் உள்ளிட்ட இதர விபரங்களை அறிய www.bitsadmission.com என்ற வலைத்தளம் செல்க.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...