தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படைக்கான 10,500 உறுப்பினர்களை 31
மாவட்டங்கள் மற்றும் 6 மாநகரங்கள் வாரியாக தேர்வு செய்ய, 1,37,120
விண்ணப்பதாரர்களுக்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால்,
37 தேர்வு மையங்களில் நவ.10 அன்று
எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.
இதில் தேர்ச்சி பெற்றவர்களின் பதிவெண்கள்
மற்றும் மதிப்பெண்கள் இக்குழும இணையதளம் www.tnusrb.tn.gov.in மற்றும்
காவல்துறை இணையதளம் www.tnpolice.gov.in ல் 12.12.2013 அன்று
வெளியிடப்பட்டுள்ளது.
இவர்கள் அடுத்த கட்டத் தேர்வான உடற்கூறு அளத்தல், உடற்திறன் போட்டிகள், மற்றும் அசல் சான்றிதழ் சரிபார்த்தல் ஆகியவற்றில் கலந்து கொள்ளத் தகுதி உடையவர் ஆவார்கள். இத்தேர்வுகளில் கலந்து கொள்ள இவர்களுக்கு அழைப்புக் கடிதம் விரைவில் அனுப்பப்படும். 26.12.2013 வரை அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாதவர்கள் அவர்கள் விண்ணப்பித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் / காவல் துணை ஆணையாளர் அலுவலகத்துக்கு நேரில் சென்று அழைப்புக் கடிதத்தில் நகலினைப் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழும அலுவலக தொலைபேசி எண் 044-28413658 ல் அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்- இவ்வாறு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழும காவல்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...