சில நாட்களுக்கு முன்பு நண்பர் ஒருவர் ஒன்பதாம் வாய்ப்பாடு – கை விரல்கள் முலம் எளிமையாக கணக்கிடும் முறையை கூறினார்.
அதே முறையை பயன்படுத்தி மற்ற வாய்பாடுகளை உருவாக்கமுடியுமா என்று முயற்சித்து பார்க்கையில் முடியும் என்று விளக்கம் கிடைத்தது....
எட்டாம் வாய்பாடு:
உதாரணத்தோடு பார்ப்போம்: 8 x 3 = 24
9 தாம் வாய்பாடு போலவே, 8 ஆம் வாய்பாடுக்கும், 8 யை எந்த என்னால் பெருக்க
வேண்டுமோ அந்த விரலை மடக்கிக் கொள்ள வேண்டும்(3 ஆல் பெருக்க, 3 ன்றாவது
விரலை மடக்கவும்). இடது புறம் உள்ள விரல்கள் எண்ணிகையும் (2 விரல்கள்),
மற்றும் வலது புறம் உள்ள விரல்கள் எண்ணிக்கையும் (7 விரல்கள்) சேர்த்து
வரும் எண்ணிலிருந்து (27), மடக்கின விரலுக்கான எண்ணை (3) கழித்தால் வருவது
(27-3=24). 8 ஆம் வாய்ப்பாடு உருவாகி விட்டது.
இதே போன்று
8 x 6 = 54 – 6 = 48
8 x 9 = 81 – 9 = 72
7 ஆம் வாய்ப்பாடு:
8 ஆம் வாய்ப்பாடு போலவே தான், ஆனால் மடக்கிய விரலுக்கான எண்ணை இரண்டு முறை கழிக்க வேண்டும்.
உதாரணம்:
7 x 7 = 63 – 7 – 7 = 49
7 x 9 = 81 – 9 – 9 = 63
7 x 1 = 9 – 1 – 1 = 7
6 ஆம் வாய்பாடு: மடக்கிய விரலுக்கான எண்ணை மூன்று முறை கழிக்க வேண்டும்
5 ஆம் வாய்பாடு: மடக்கிய விரலுக்கான எண்ணை நான்கு முறை கழிக்க வேண்டும்
..................
இதை ஒரு சூத்திரமாக கொடுக்க வேண்டும் என்றால்
N – Nth table (வாய்ப்பாடு)
M - Multiplier எந்த எண்ணால் பெருக்க வேண்டுமோ
NLF – number of left side fingers (இடது புறம் உள்ள விரல்களின் எண்ணிக்கை)
NRF – number of right side fingers (வலது புறம் உள்ள விரல்களின் எண்ணிக்கை)
R – Result (விடை)
R = (NLF)(NRF) – (9 – N)* M
சில உதாரணம் செய்து பார்ப்போம்:
9 x 9 = 81 – (9 – 9)* 9 = 81
7 x 6 = 54 – (9 – 7)* 6 = 42
1 x 1 = 09 – (9 – 1)* 1 = 1
ஒன்றை கண்டிப்பாக ஒற்றுக்கொள்ள வேண்டும், ஒன்பதாம் வாய்பாடு அளவிற்கு மற்றது எளிமையாக இல்லை.
இருந்தாலும் சூழ்நிலைக்கு தகுந்தவாறு வேண்டும் பொழுது பயன் படுத்திக்கொள்ளலாம்.
சற்று சிரமமாகத்தான் இருக்கிறது, இருந்தாலும் நல்ல அருமையான கண்டுபிடிப்பு, பாராட்டுக்கள் நண்பரே, மேலும் எளிதாக்க முயற்சி செய்யுங்களேன்,
ReplyDeleteNice
ReplyDeletecongrats sir
ReplyDeleteExcellent.
ReplyDeletenice.
ReplyDeleteplease send iii term syllabus for std one to eight
ReplyDeletesuper sir
ReplyDelete