உபரி (சர்பிளஸ்) ஆசிரியர்களை பணி நிரவல் செய்த
பிறகே, புதிய ஆசிரியர்களை நியமிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
பணிநிரவலுக்கு பிறகு, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை குறையவாய்ப்பு உள்ளதாக
தெரிகிறது.
கடந்த ஆக.,17, 18 தேதிகளில் நடந்த ஆசிரியர்
தகுதித் தேர்வில், 27ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். "தேர்ச்சி
பெற்றவர்கள், மதிப்பெண் அடிப்படையில், பள்ளிகளில் காலியாக உள்ள 15 ஆயிரம்
பணியிடங்களில் நிரப்பப்படுவர்" என தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே, அரசு
மற்றும் உதவிபெறும் பள்ளி களில், கூடுதலாக உள்ள ஆசிரியர்களை பணிநிரவல்
(ஆசிரியர் இல்லாத இடங்களில், உபரி ஆசிரியர்களை நியமித்தல்) செய்த பிறகு,
புதிய ஆசிரியர்களை நியமிக்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
கடந்த ஆக.,1 மாணவர்களின் வருகைப்பதிவேடு படி,
ஆசிரியர் பணியிடம் நிர்ணயிக்கும் பணி நடந்து வருகிறது. விதிமுறைப்படி,
ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்; ஆறு
முதல் எட்டாம் வகுப்பு வரை, 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்; ஒன்பது,
பத்தாம் வகுப்புகளில் 160 மாணவர்களுக்கு, ஐந்து ஆசிரியர்களும் இருக்க
வேண்டும். ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் குறைவான மாணவர்களே வருகின்றனர்.
இதையடுத்து, உபரி ஆசிரியர்கள் பணிநிரவல்
செய்யப்பட உள்ளனர்; பணிநிரவலுக்கு பிறகு, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை
குறையவாய்ப்பு உள்ளது. இதனால், தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு,
பணியிடம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் அதிக கனவுகளுடன் கார்த்திருக்கும் இத்தருணத்தில் அவர்கள் ஏமாற்றம் அடையாத வண்ணம் கல்வித்துறை முடிவெடுக்க வேண்டுமென பணிவோடு கேட்டுக்கொள்கிறேன் . இங்ஙணம் : சி . சுகுமார் , தலைமையாசிரியர் , ஆதனூர் , திருவண்ணாமலை மாவட்டம் .
ReplyDeletesukumar sir avarkaluku thanks..
ReplyDeleteteacher ana piraku TET endral enna endru kooda theriyatha teachers mathiyil engalalukaka (TET passed candidate) pesuvathu miguntha makilchi alikkirathu.
thanks to sukumar sir. thanking you very much
CONSIDER TET PASSED CANDIDATE
ReplyDeleteiyya eppa sami tetcv vettala iruka paitheyam pedichurm pola iruku......
ReplyDeletevelila irukaravengle vela kodukeranga tet pass anuvangku eppa posting poduvenga...
ReplyDeleteதலைமையாசிரியர் திரு சுகுமார் ஐயா அவர்களுக்கு வணக்கம் . எங்களுக்காக அனுதாபக்குரல் கொடுத்தமைக்கு மிக்க நன்றி நன்றி நன்றி .
ReplyDelete