Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கம்ப்யூட்டர் சாப்ட்வேர் ஒருபொழுதும் ஆசிரியராக முடியாது

 
     ஆசிரியர்கள் இன்றி கல்வி கற்பித்தல் என்பது தரமில்லாத கல்வி. கம்ப்யூட்டர் சாப்ட்வேர் ஒருபோதும் ஆசிரியராக முடியாது" என, பல்கலை மானியக்குழு துணைத்தலைவர் தேவராஜ் பேசினார். 
        திருமலையாம்பாளையம் நேரு கல்லூரி வளாகத்தில், 2013ம் ஆண்டுக்கான பி.கே.தாஸ் நினைவு சிறந்த பேராசிரியர் மற்றும் "வாழ்நாள் சாதனையாளர் விருது" வழங்கும் விழா நடந்தது. டில்லி, பல்கலை மானியக்குழு துணைத்தலைவர் தேவராஜ், தலைமை வகித்து பேசுகையில்,"ஆசிரியர்கள் என்றும் மாணவர்களே என்பதற்கேற்ப, காலத்திற்கேற்ப தங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். 

            ஆசிரியர்கள் இன்றி கல்வி கற்பித்தல் என்பது தரமில்லாத கல்வி. கம்ப்யூட்டர் சாப்ட்வேர் ஒருபொழுதும் ஆசிரியராக முடியாது. நமது நாட்டு இளைஞர்களின் அறிவு, வெளிநாடுகளில் பயன்பட்டு கொண்டிருக்கிறது. அவர்களுக்கு சிறந்த அரவணைப்பு, பணி பாதுகாப்பு மற்றும் நன்மதிப்பு வழங்கினால் நமது நாடு சிறந்து விளங்கும்" என்றார்.முதுநிலை பிரிவில் திருச்சி, பிஷப் ஹைபர் கல்லூரியின் உமேஷ் சாமுவேல் ஜெபசீலன்,காரைக்குடி அழகப்பா பல்கலையின் அன்பழகன், கோவை பாரதியார் பல்கலையின் பொன்பாண்டியன், தனபாக்கியம், திருப்பூர் சிக்கண்ணா அரசு கல்லூரியின் நசீரா, கொச்சி பல்கலையின் முகமது ஹத்தா, சென்னை சர் தியாகராயா கல்லூரியின் பழனிசாமி உட்பட 16 பேருக்கும், இளநிலை பிரிவில் 13 பேருக்கும், சிறந்த பேராசிரியர்களுக்கான விருது வழங்கப்பட்டது.மேலும், கேரளா பல்கலையின் சந்திரசேகர், கோவை வேளாண் பல்கலையின் குமார், பாரதியார் பல்கலையின் மனோகரன், சென்னை "வெல்டெக்" பல்கலையின் கண்ணன் ஆகியோருக்கு, "வாழ்நாள் சாதனையாளர்" விருது வழங்கப்பட்டது.




1 Comments:

  1. ஐயா வணக்கம்,

    தமிழ்நாட்டில் கணினி படித்த ஆசிரியர் உடைய நிலமையை என்ன?
    எதற்கு நாங்கள் இந்த படிப்பை படித்தோம் ...அரசங்கம் எதற்கு எந்த ஒரு முடிவு எடுக்காமல் இருக்கிறது ... கணினி படித்தவர்களுக்கு குடும்பம் இல்லையா?...அரசங்கதிடம் கண்டிப்பாக இந்த கருத்தை முன்வைக்க வேண்டும்...தயவுசெய்து B.ed Computer Science பாடத்தை எடுக்க வேண்டும் என்று கூறுங்கள்...இனி வரும் மாணவர்களாவது ஏமாற்றம் அடையாமல் படித்து குடும்பத்தை காக்கடும்....மீண்டும் சொல்கிறேன் இதை அரசாங்கத்துக்கு தெரியபடுத்துங்கள் குடும்பத்தை காத்திருங்கள்.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive