Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாணவர்களுக்கு ஒரு சுதந்திரம்


              எனது பள்ளி நாட்களில் வருகைப்பதிவை தவிர என் பெயர் வேறு எப்போதும் அழைக்கப்படாத நாட்களை கடந்திருக்கிறேன்.முதல் மூன்று ரேங்க் எடுப்பவர்கள் தான் கட்டுரை ,பேச்சு மற்றும் கவிதை போட்டியில் கலந்து கொள்ள முடியும்.
 
          நல்ல நிறமாய் இருந்தால் பள்ளி விழாக்களில் ஆடவும் ,நடிக்கவும் வாய்ப்பு கிடைக்கும்.அண்ணா ரவி சார்(தமிழ் ஆசிரியர் )என் பள்ளிக்கு வரும் வரை பேக் ஸ்க்ரீன் போஸ்ட் தான் எனக்கு.
 
              ஆனால் இன்று அரசுப்பள்ளிகளில் அந்த நிலை மாறியுள்ளது  CCE என்கிற முறையில் மாணவர் திறன்களை மதிப்பிடு செய்கிறோம் .60 மதிப்பெண்கள் பருவத்தேர்வுக்கு  20 மதிப்பெண் வகுப்பறையில் நடக்கும்சிறுதேர்வுக்கு மற்றும் 20 மதிப்பெண்கள் மாணவர் தனித்திறமைகளை பாடப்பகுதியில் வெளிப்படுத்துவதற்கு .மாணவர்கள் அசத்துகிறார்கள் .எல்லோரும் பாராட்டப்படுகிறார்கள்.(தனியார் பள்ளிகளை பற்றி எனக்கு விரிவாகத்தெரியது .தெரிந்தவர்கள் பகிர்ந்து கொள்ளலாம் )
 
              எனது வகுப்பில்  சிவாஜி பழக்கூடையில் தப்பித்த நிகழ்வை நாடகமாக நடத்தினார்கள் எட்டாம் வகுப்பு மாணவர்கள் (எட்டாம் வகுப்பிற்கு மட்டும் வரலாறும் நடத்துகிறேன்).அவர்களிடம் இருந்தகுளிர்பான கிரேடில் அமரக்கூடிய அளவில் ஒரே ஒரு குட்டி மாணவன் தான் இருந்தான் .அவனோ சராசரி மதிப்பெண்கள் வாங்கும் சற்று கூச்சசுபாவம் உள்ளவன் .எனக்கு சற்று தயக்கமாகவே இருந்தது .மாணவர்களோ தங்கள் குழுவில் வெகு தீவிர ஒத்திகையில் இருந்தனர் .
 
              அவர்கள் நாடகம் நடத்திய நாளில் அந்த குட்டி சிவாஜி ஒவரங்கசிபின் அரண்மனையை விட்டு கோபத்துடன் வெளியேறி ராம்சிங்கிடம்"ஒவ்ரங்கசிப் வழங்கிய இந்த கிலாத்தை (மொகலாய அங்கி)கிளித்தெறிவேன்  .ஆக்ரா வீதிகளில் திரியும் பிச்சைக்காரர்களுக்கு பரிசளிப்பேன் "என்று முழங்கியபோது எனக்கு சிலிர்த்து விட்டது.f .a (a ) வாழ்க!வகுப்பறை படிப்பதற்கும் எழுதுவதற்கும் மட்டுமே என்ற நிலை மாறி கற்பதற்கும் ,செயல் படுத்துவதற்கும் என்ற நிலை உருவாகி வருகிறது.நாளைய தமிழகம் கல்வியால் ,கலைகளால்   நல்லதாய் மலரும் என்னும் நம்பிக்கையோடு                                                                                                                                                                  -கஸ்தூரி




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive