இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 75.
தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியை
அடுத்த இளங்காடு என்ற கிராமத்தில் கடந்த 1938ம் ஆண்டு பிறந்தவர்
நம்மாழ்வார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண்மை பட்டப்படிப்பை முடித்த
அவர், 1963ம் ஆண்டு கோவில்பட்டியில் மண்டல வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில்
பணிபுரிந்தார். அப்போது ரசாயன உரங்களால் மண்ணிற்கும், பயிர்களுக்கும்
ஏற்படும் பாதிப்புகளை அறிந்த அவர், விவசாய முறையில் மாற்றங்கள் கொண்டு
வரவேண்டும் என முடிவு செய்து தனது அரசு வேலையை உதறினார்.
தொடர்ந்து இயற்கை வேளாண் முறைகளை தமிழகத்தில்
பிரபலப்படுத்துவற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வந்தார். இதன் விளைவாக தற்போது
தமிழகத்தில் இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வு பெருகியுள்ளது. இதற்கு
முக்கிய காரணம் நம்மாழ்வார் என்றால் அது மிகையல்ல.
இயற்கை வேளாண் விழிப்புணர்வுக்காக பல்வேறு
விருதுகளைப் பெற்றுள்ள நம்மாழ்வார், தமிழக இயற்கை உழவர் அமைப்பு மற்றும்
தமிழ்நாடு சுற்றுச்சூழல் இயக்கம் என்ற இயக்கங்களையும் நடத்தி வந்தார். உடல்
நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த அவர் நேற்று பட்டுக்கோட்டையை அடுத்த
அத்திவெட்டியில் மரணமடைந்தார்.
Nammaalvaar pugal endrum maraiyaathu. Nalla manithar. Arthamulla vaalkkai vaalnthuvittar. I like nammalvaar.
ReplyDeleteI like nammaalvar.
ReplyDeletenammalvar karuthukkalai puthakamaka veli ettal nandraga irukkum. avarudaiya karuthukalai TV channalil oliparappinal nandraga irrukkum.
ReplyDelete