Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

குறைந்த நில அளவு நிர்ணயம் மெட்ரிக், நர்சரி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் தப்புமா?


          குறைந்த நில அளவு நிர்ணயம் செய்ய தமிழக அரசு ஓர் வல்லுனர் குழுவை நியமித்து பல்வேறு நகரங்களில் சென்று கருத்து கேட்பு நடத்தி தன்னுடைய பணியை இறுதி செய்யும் தருவாயில்உள்ளது. 
 
             பேராசிரியர் சிட்டிபாபு தலைமையிலான குழு மாநகராட்சிக்கு – 6 கிரவுண்டு, நகராட்சிக்கு – 10 கிரவுண்டு, மாவட்ட தலைநகரங்களில் – 8 கிரவுண்டு, பஞ்சாயித்து யூனியன் – 1 ஏக்கர், மற்றும் கிராமம் – 3 ஏக்கர் என நிர்ணயம் செய்தது இதற்கு முன்பாக 50 ஆண்டுகள் 40 ஆண்டுகள் என ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் பள்ளிகள் பற்றி பேராசிரியர் சிட்டிபாபு ஏதும் கூறவில்லை.

                 எனவே RTE வரும் வரை ஏதாவது 2011, 2012 வரை நிறைய பள்ளிகள் தொடர் அங்கீகாரம் (Renewal) பெற்றே நடைபெற்று வருகின்றன. ஆனால் தற்போது தொடர் அங்கீகாரமின்றி 1200 மெட்ரிக் பள்ளிகள் இயங்கி வருகின்றன RTE Act என்பதே எல்லோருக்கும் கல்வி, எளிமைக் கல்வி, இனிமைக் கல்வி என துவங்கப்பட்டது தான் ஆனால் கட்டாய கல்வி சட்டமென அறிவித்து விட்டு கல்வி கூடங்களை தொடர்ந்து நடத்த அனுமதிக்காமல் இருப்பது ஏன்?

                சமீபத்தில், நர்சரி பள்ளிகளுக்கு கூட குறைந்த பட்ச நில அளவின்படி உள்ள பள்ளிகள் எத்தனை என தொடக்க கல்வி இயக்குனரகம் புள்ளி விவரங்களை சேமித்து வருகிறது. நர்சரி பள்ளிகளுக்கு என குறைந்த பட்சம் நில அளவு ஏதுமே இது வரை அறிவிக்காத போது எப்படி இத்தகைய குறைந்த பட்ச நில அளவை பூர்த்தி செய்யாத பள்ளிகள் என புள்ளி விவரங்களை தொடக்க கல்வி இயக்குனரகம் சேகரித்து வருவது ஏன்? நில அளவு இன்னும் அறிவிக்கபடாத போது எந்த விதத்தில் வல்லுனர் குழுவினரும் கல்வித்துறை அதிகாரிகளும், அடிப்படையில் உள்ள பிரச்சினைகளை புரிந்து கொண்டுள்ளனரா? எனத்தெரியவில்லை.

                பல பள்ளிகள் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழும் பகுதிகள் தரமான கல்வியை தந்து வருகிறது. அங்கு அதிகம் நிலம் பெரும் வாய்ப்பு இல்லவே இல்லை. இத்தகைய பள்ளிகளுக்கு இதுவரை அரசு கல்வித்துறை உரிய அங்கீகாரங்களையும் கொடுத்து தொடர்ந்து பல ஆண்டுகள் இப்பள்ளியில் பயின்ற லட்சக்கணக்கானோர் பல்வேறு துறைகளில் பல்வேறு பணிகளில் வேலை செய்து வருகின்றனர். கல்வியின் ஆலயம் எனப்படும் இப்பள்ளிகளை பல்வேறு நெருக்கடி கொடுப்பதன் பலன் என்ன? மேல்தட்டு மக்களுக்குக்கு மட்டும் மேலான கல்வியை பெற வேண்டும் கீழ் தட்டு மக்களுக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கும் ஒரு தரமான கல்வியை தரவேண்டாமா?

                வல்லுனர் குழு சென்னை மதுரை, கோவை போன்ற பெருநகரங்கள் மத்தியில் உள்ள நர்சரி பள்ளிகள் இப்போது இருக்கின்ற நில அளவையும் கணக்கில் எடுத்துக் கொண்டு ஏற்கனவே நடைபெற்றுவரும் பள்ளிகளுக்கு (Exemption) விலக்கு தந்தால் நல்லது. 1.2 கிரவுண்டு அல்லது 1 கிரவுண்ட் என நாசரி பள்ளிகளுக்கு வல்லுனர் குழு குறைந்த அளவு நில நிர்ணயம் செய்தால் கூட 3000 பள்ளிகள் மூடப்படும் அபாயம் உள்ளது என்பதை அறிந்திருக்கிறதா? அரசு உதவி பெறும் பள்ளிகளும் குறிப்பாக உயர்நிலை பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் கூட இந்த நில உச்சவரம்பில் வரும் என்பதும், ஏற்கனவே 460 க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகள் இதனால் பாதிக்கப்பட்டு உரிய தொடர் அங்கீகாரமின்றி செயல்படுகின்றன என்பதனையும் கல்விதுறை அதிகாரிகளும் வல்லுனர்குழு உறுப்பினர்களும் அறிந்து இறுதி முடிவு எடுக்க வேண்டும்.

            எனவே, கிட்டதட்ட 15 லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை முடிவு செய்கிற நிலையில் வல்லுனர் குழுவும் கல்வித்துறை அதிகாரிகளும் உள்ளனர் கிட்டதட்ட 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் உதவி பெறும் பள்ளிகளின் பணிபுரியும் ஆசிரியர்களும், மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களும், நர்சரி பள்ளி ஆசிரியர்களும், என ஆசிரியர்களின் எதிர்காலம் இந்த வல்லுனர் குழுவின் முடிவில்தான் உள்ளன. எனவே,ஆசிரியர்களின் வாழ்வாதாரங்களை பறிக்கின்ற மாணவர்களின் எதிர்காலத்தை பாழாக்கின்ற எந்த முடிவையுப் எடுக்காது, நம் தமிழக முதல்வர் டாக்டர் அம்மாவின் அரசு செய்யும் என கல்வியாளர்கள், பள்ளி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

                மேலும், சமீபத்தில் தேனி யில் கூடிய மாநிலக் கூட்டத்தில் தனியார் பள்ளி நிர்வாகிகள் அப்படி குறைந்த நில அளவு நிர்ணயம் குழு இடத்தை நிர்ணயம் செய்த போது தற்போது பல ஆண்டுகளாக சிறப்பான பணியாற்றி வரும் பள்ளிகள் தொடர்ந்து இந்த நில நிர்ணயத்தினால் பாதிக்காதவாறு நிச்சயம் விலக்கு அளிக்க பரிந்துரைக்க வேண்டும் எனவும் தமிழக அரசு தொடர்ந்து தரமிக்க கல்வியை தரும் தனியார் பள்ளிகளை ஊக்குவிக்க வேண்டுமென்றும் தீர்மானம் இயற்றி உள்ளனர். என்ன நடக்குமோ அது நன்றாகவே நடக்கும் என நாம் அரசின் நல்ல முடிவிற்காக காத்திருக்கிறோம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive