விதிகளை கடைபிடிக்காத, ஒன்பது பள்ளி
வாகனங்களின் தகுதி சான்றை சப்-கலெக்டர் ரத்து செய்தார். விபத்துக்களை
தடுக்க பள்ளி வாகனங்களில் பல்வேறு மாற்றங்கள் செய்ய அரசு உத்தரவிட்டது.
அரசு விதிமுறைபடி பள்ளி வாகனங்களில் மாற்றம்
செய்யப்பட்டுள்ளதா, என்பதை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சப்-கலெக்டர் ஆய்வு
செய்ய வேண்டும்.
மேட்டூர் தாலுகாவில் 221 பள்ளி வாகனங்கள்
உள்ளன. இவற்றில் 35 வாகனங்கள் நேற்று ஆய்வுக்கு வந்தன. மேட்டூர்
சப்-கலெக்டர் அனீஷ்சேகர் ஆய்வு செய்தார். வேக கட்டுப்பாட்டு கருவி
பொருத்தாத, இருக்கை மோசமாக இருந்த, முதலுதவி பெட்டி இல்லாத, ஒன்பது பள்ளி
வாகனங்களின் தகுதி சான்று ரத்து செய்யப்பட்டன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...