Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தேர்வு பணியில் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களையும் சேர்க்க திட்டம்.


              பொது தேர்வுப் பணியில், அரசு நடுநிலைப்பள்ளி, பட்டதாரி ஆசிரியரையும் சேர்க்க, தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது. 
 
           பிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வுப் பணியில், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும், பட்டதாரி, முதுகலை ஆசிரியர் மட்டும் ஈடுபடுத்தப்படுகின்றனர். அரசு நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும், பட்டதாரி ஆசிரியர் சேர்க்கப்படுவதில்லை.

           ஒரே தகுதி உடைய பட்டதாரி ஆசிரியரில், பள்ளி கல்வி துறையைச் சேர்ந்தவர்களை, தேர்வு பணியில் ஈடுபடுத்துவதும், தொடக்க கல்வித் துறையைச் சேர்ந்த ஆசிரியரை, கண்டுகொள்ளாத நிலையும், இத்தனை ஆண்டுகளாக இருந்து வருகிறது."இந்த நிலையை மாற்றி, இரு துறைகளிலும் உள்ள பட்டதாரி ஆசிரியருக்கும், தேர்வுப்பணி வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் முன்னேற்றசங்கம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு போன்ற அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், வரும் பொது தேர்வில், நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியரையும், தேர்வுப் பணியில் ஈடுபடுத்த, தேர்வுத் துறை முடிவு செய்திருப்பதாக, துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.




5 Comments:

  1. nalla mudivu sir by jp

    ReplyDelete
  2. நல்லமுடிவு.இடப்பற்றாக்குறையை போக்க நல்லா பில்டிங் வசதியுள்ள நடுநிலைப்பள்ளியிலே பொதுத்தேர்வு மையம ஏற்படுத்தி அந்தந்த பள்ளி த.ஆ +2,10 தேர்வு நடந்த அரசு உடனடியாக சிந்தித்து இவ்வாண்டு முதலே செயல்படுத்த வேண்டும். நாங்க கண்டிப்பா அவர்களை விட சிறப்பாகவும் செய்வோம். நல்லா உங்களையும் கவனிப்போம்.

    ReplyDelete
  3. நடுநிலைப்பள்ளிப் பட்டதாரி ஆசிரியர்களே! 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியில் தேர்வு எழுத முடிவதில்லை.இதில் உங்கள் நடுநிலைப்பள்ளியில் தேர்வு மையம் அமைக்க வேண்டுமா? நீங்கள் வேண்டுமானால் பொது தேர்விற்கு கண்காணிப்பாளர்களாக இருந்து கொள்ளுங்கள். நாங்கள்(school education BT's) உங்கள் பிள்ளைககளுக்கு பாடம் நடத்துகிறோம். OK Va. மேலும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியை எங்களுக்கு கொடுங்கள்.

    ReplyDelete
  4. bt's are all in same cader,then y this partiallity (middle, high hr.sec,coroporation) so its very good decssion,thanks.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive