மும்பை: மராட்டிய மாநிலத்தில், பள்ளிகளில் செயல்படும் மதிய உணவு திட்டம், இனிமேல் மையப்படுத்தப்பட்ட சமையலறையில்(centralised kitchen) செயல்படும் என்று அம்மாநில கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சட்டமன்றத்தில் அவர்
பேசியதாவது: மதிய உணவு திட்டத்திற்கான மையப்படுத்தப்பட்ட சமையலறை திட்டம் கடந்த 2012ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திலேயே இறுதி செய்யப்பட்டு விட்டது. ஆனால்,
ஒரு சுய உதவிக்குழு, இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து விட்டதால், தீர்ப்பு வரும்வரை நாம் காத்திருக்க வேண்டியுள்ளது.
இந்த வழக்கை மிகவும் விரைந்து முடிக்க,
தனியார் வழக்கறிஞர்கள் ஈடுபடுத்தப்படுவதுடன்,
மூத்த சட்ட வல்லுநர்களுடனும் ஆலோசனை
கேட்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
அமைச்சரின் பதிலின்போது குறுக்கிட்டுப்
பேசிய சபாநாயகர், "மாநில அட்வகேட் ஜெனரல் மற்றும்
தொடர்புடைய பிறருடன், இந்த வழக்கை விரைந்து முடிப்பதற்கான
சந்திப்பை உறுதி செய்கிறேன்" என்று தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...