மாவட்டத்தில்
உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் புகார் பெட்டிகள், குறைகேட்புக் குழு,
ஒழுங்கு நடவடிக்கைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று ஆட்சியர்
கு.கோவிந்தராஜ் உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூரில்
ஒருசில அரசுப் பள்ளிகளில் தகராறில் ஈடுபட்ட மாணவர்கள் தாற்காலிக நீக்கம்
செய்யப்பட்டது, மாணவர்களை ஆசிரியர் அடித்தது போன்ற சம்பவங்கள் அடிக்கடி
நடைபெற்றுவருகின்றன.
இதையடுத்து,
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளின்
தலைமையாசிரியர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர்
கு.கோவிந்தராஜ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில், ஆட்சியர் கு.கோவிந்தராஜ் பேசியது:
மாணவப்
பருவம் முக்கியமான பருவம், ஒவ்வொரு மாணவ, மாணவியரும் தங்களின்
எதிர்காலத்தை நிர்ணயித்துக் கொள்ளக்கூடிய வகையில் நல்ல அறிவையும், சிறந்த
கல்வியையும், நல்ல ஒழுக்கத்தையும், நற்குணங்களையும் கற்றுக்கொள்ளக் கூடிய
வாய்ப்பு பள்ளிப் பருவத்தில் தான் அமைகிறது.
நல்வழிப்படுத்துவது ஒவ்வொரு பெற்றோருக்கும், ஒவ்வொரு ஆசிரியருக்கும் முக்கியமான கடமையாகும். கணினி, கைப்பேசி, தொலைபேசி, வலைத்தளங்கள்
இதை ஒவ்வொரு மாணவ, மாணவியரும் அறிந்து கொள்ளும் வகையில் அவர்களை,
போன்ற
பல்வேறு தகவல் பரிமாற்ற சாதனங்களை ஆக்கங்களுக்கும், அறிவு வளர்ச்சிக்கும்
மட்டுமே மாணவர்கள் பயன்படுத்தவேண்டும். தவறான தகவல்களை அறிவதற்கும், தவறான
செயல்களுக்கும் பயன்படுத்தக்கூடாது. பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள்
கைப்பேசிகளை கட்டாயம் பயன்படுத்தக் கூடாது. பெற்றோர்களும், தங்கள்
பிள்ளைகளிடம் கைப்பேசிகளை கொடுத்து பள்ளிக்கு அனுப்பக் கூடாது.
ஒவ்வொரு
பள்ளியிலும் புகார் பெட்டிகளை உடனடியாக வைக்க வேண்டும். ஒவ்வொரு வாரமும்
தவறாமல் திறந்து, அதில் உள்ள கடிதங்கள் குறித்து தலைமையாசிரியர், அனைத்து
ஆசிரியர்களையும், அழைத்து விவாதித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள
வேண்டும். அக்கடிதங்களை பதிவேடுகளில் பதிவு செய்ய வேண்டும்.
ஒவ்வொரு
பள்ளியிலும் குறைகேட்புக் குழு, ஒழுங்கு நடவடிக்கைக்குழு உடனடியாக
ஏற்படுத்த வேண்டும். இக்குழுவில் ஆசிரியர்கள், பெற்றோர்-ஆசிரியர் கழகப்
பிரதிநிதிகள், மாணவ, மாணவியர்கள் இடம் பெறச் செய்ய வேண்டும். ஆசிரியர்கள்
அளிக்கின்ற தகவல்களுக்கு பெற்றோர்கள் உரிய கவனம் செலுத்தி தங்கள்
பிள்ளைகளின் செயல்பாடுகளைக் கண்காணித்து, கண்டித்து அறிவுரை வழங்கி
நல்வழிப்படுத்த வேண்டும். ஆசிரியர் பணி அற்புதமான பணி. இன்றைய இளம் மாணவ,
மாணவியர்களை நல்லவர்களாக, வல்லவர்களாக உருவாக்கும் வாய்ப்பு
ஆசிரியர்களுக்குத்தான் கிடைத்துள்ளது. அவர்கள் தங்கள் திறமைகளை
வெளிக்கொணர்வதற்கு ஆசிரியர்கள் தான் வழிகாட்ட வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...