செவ்வாய்
கிரகத்தை நோக்கி பயணம் செய்யும் மங்கல்யான் விண்கலம் நேற்று
பூமியிலிருந்து 9 லட்சத்து 25 ஆயிரம் கி.மீ தூரத்தை தாண்டியது. இதன் மூலம்
புவியீர்ப்பு மண்டலத்தை கடந்துசென்ற முதல் இந்திய விண்கலம் என்ற பெருமை
மங்கல்யானுக்கு கிடைத்துள்ளது.
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக ரூ.450
கோடி செலவில் உருவாக்கப்பட்ட மங்கல்யான் விண்கலம் பி.எஸ்.எல்.வி சி-25
ராக்கெட் மூலம் கடந்த மாதம் 5ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியை
சுற்றிக் கொண்டிருந்த மங்கல்யான் விண்கலம், கடந்தம் 1ம் தேதி அன்று புவி
சுற்றுவட்ட பாதையில் இருந்து விலக்கி, செவ்வாய் கிரகம் நோக்கி வெற்றிகரமாக
உந்தப்பட்டது. விண்வெளியின் ஈர்ப்பு விசையில் சீராக சென்று கொண்டிருக்கும்
மங்கல்யான் நேற்று மதியம் 1.14 மணியளவில், பூமியிலிருந்து 9 லட்சத்து 25
ஆயிரம் கி.மீ தூரத்தை கடந்து சென்று விட்டது. இதன் மூலம் புவியீர்ப்பு
மண்டலத்தை தாண்டி சென்ற முதல் இந்திய விண்கலம் என்ற பெரும் மங்கல்யானுக்கு
கிடைத்துள்ளது. மங்கல்யான் பாதையில் ஒருவேளை விலகல் ஏற்பட்டால், அதை வரும்
11ம் தேதி, ஏப்ரல், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய மாதங்களில் 4 முறை சரி
செய்யவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.
SALUTE TO OUR SCIENTISTS
ReplyDelete