ஐ.நா.சபை: "இந்தியாவில் 7 கோடி குழந்தைகளின்
பிறப்பு பதிவு செய்யப்படவில்லை" என ஐ.நா., குழந்தைகள் நிதியம் (யுனிசெப்)
தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, "யுனிசெப்" அமைப்பு வெளியிட்டுள்ள
அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகம் முழுவதும், 161 நாடுகளில்
எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, குழந்தைகளின் பிறப்பை பதிவு செய்யாத முதல்
10 நாடுகளில், இந்தியா முதலிடத்தில் உள்ளது; இங்கு, ஐந்து வயதுக்குக்
குறைவான, 7.10 கோடி குழந்தைகளின் பிறப்பு பதிவு செய்யப்படவில்லை,
உலகளவில், 23 கோடி குழந்தைகளின் பிறப்பு பதிவு
செய்யப்படவில்லை. இவ்வாறு, "யுனிசெப்" அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"குழந்தைகளின் பிறப்பை பதிவு செய்ய வேண்டியது அவசியம்; அவ்வாறு பதிவு
செய்வது, குழந்தையின் அடையாளத்தை அறிவதில் முதல் பங்கு வகிக்கிறது;
உரிமைகள் மற்றும் அரசின் உதவி பெறுவதில், பிறப்பு சான்றிதழ் முக்கிய பங்கு
வகிக்கிறது" என யுனிசெப் அமைப்பின் துணை நிர்வாக இயக்குனர், கீதா ராவ்
குப்தா தெரிவித்துள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...