கல்விக்கான, 50 டிவி சேனல்கள் அடங்கிய, டிஷ்
ஆன்டெனா விரைவில் விற்பனைக்கு வருகிறது. இதற்கான ஸ்டூடியோ, சென்னை ஐ.ஐ.டி.,
வளாகத்தில் நிறுவப்படுகிறது.
பொழுதுபோக்கு, டிவி சேனல்கள், பல்வேறு
நிறுவனங்களின், டிஷ் ஆன்டெனாக்கள் மூலம் பார்க்க முடியும். முதல் முறையாக,
முழுக்க முழுக்க கல்வி சேனல்களை மட்டும் வழங்கும் புதிய டிஷ் ஆன்டெனா
விரைவில் வருகிறது. மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை இதற்கான பணிகளில்
ஈடுபட்டு உள்ளது.
டிஷ் ஆன்டெனா விலை, 1,500 ரூபாய். இதன் மூலம்,
50 கல்வி சேனல்கள் தெரியும். மேல்நிலை கல்வி, உயர்கல்வி, மருத்துவ கல்வி,
ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., போட்டித் தேர்வுகள் போன்ற அனைத்து தகவல்களை, இந்த
சேனல்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மேலும், ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., மற்றும் முக்கிய
பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்களின் நேர்காணல் நிகழ்ச்சிகளையும் பார்க்க
முடியும். மாணவர்கள், எஸ்.எம்.எஸ்., மூலம், பேராசிரியர்களுடன் கலந்துரையாட
வசதியுண்டு.
இந்த சேனல்கள் சேவைக்காக, இஸ்ரோ நிறுவனம்,
இரண்டு ஜி-சாட்-8 வகை டிரான்ஸ்பான்டர்களை வழங்கியுள்ளது. இதற்கான ஸ்டூடியோ,
சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் அமைகிறது. மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்
துறையின் தடையின்மை சான்றுக்காக, இந்த திட்டம் அனுப்பி வைக்கப்பட்டு
உள்ளது. சான்று கிடைத்ததும், மே மாதம், 1ம் தேதியில் இருந்து, டிஷ்
ஆன்டெனாக்கள் விற்பனைக்கு வரும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...