பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டுத்
தேர்வுகள் இன்று தொடங்கி 23ம் தேதி வரை நடக்கிறது. இந்த தேர்வை கண்காணிக்க 5
இணை இயக்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.அரசு மற்றும் அரசு நிதியுதவி
பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ& மாணவியருக்கு
பொதுத் தேர்வு போல ஒரே மாதிரியான தேர்வுகளை நடத்துவது என்று கடந்த 2
ஆண்டுகளாக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.
இதன்படி அனைத்து வகை பள்ளிகளில் படிக்கும்
பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று அரையாண்டுத் தேர்வுகள் தொடங்குகின்றன. இவை
23ம் தேதி வரை நடக்கும்.தேர்வுக்கான கேள்வித் தாள் ஒரே இடத்தில்
அச்சிடப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தேர்வை கண்காணிக்க பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் 5 இணை
இயக்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தலா 6 மாவட்டங்களை
கண்காணிப்பார் கள்.
அந்தந்த மாவட்டங்களில் தேர்வு எழுத உள்ள
மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவையான அளவு கேள்வித்தாள் குறித்த
நேரத்தில் அச்சகங்களில் இருந்து பெறப்பட்டுள்ளதா, கேள்வித்தாள்
வைக்கப்பட்டுள்ள மையங்களில் போதிய பாதுகாப்பு உள்ளதா என்பதையும்
கவனிப்பார்கள். தேர்வு மையங்களில் எந்த குளறுபடியும் ஏற்படாமல் பார்த்துக்
கொள்வார்கள்.இதையடுத்து, பத்தாம் வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு 12ம்
தேதி தொடங்கி 23ம் தேதி முடிகிறது. அந்ததேர்வையும் மேற்கண்ட 5 இணை
இயக்குநர்கள் கண்காணிப்பார்கள். மற்ற வகுப்புகளுக்கான தேர்வுகள் இந்த
தேர்வுகளுடன் சேர்த்து நடக்கும். 24ம் தேதி முதல் ஜனவரி 2ம் தேதி வரை
பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 2ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை ??? 2nd is reopening..day....
ReplyDelete