Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

குரூப் 4 தேர்வு ரிசல்ட் விரைவில் வெளியிடப்படும் - டிஎன்பிஎஸ்சி தலைவர் நவநீதகிருஷ்ணன்.


            டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் 4 பணியில் 5,566 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி நடந்தது.
 
         குருப் 4 தேர்வு மையத்தை பார்வையிட்ட டிஎன்பிஎஸ்சி தலைவர் நவநீதகிருஷ்ணன் 3 மாதத்தில் தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று அறிவித்தார். ஆனால், தேர்வு முடிந்து சுமார் 4 மாதங்கள் ஆகிறது. ஆனால், இன்னும் ரிசல்ட் வெளியிடப்படவில்லை. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தலைவர் நவநீதகிருஷ்ணனிடம் கேட்டபோது கூறுகையில், விடைத்தாள்கள் (ஓஎம்ஆர் ஷிட்) அனைத்தும் ஸ்கேன் செய்யப்பட்டு அதன் பின்னர் விடைத்தாள் திருத்தும் பணி நடைபெற்று வந்தது. இப்பணியில் டிஎன்பிஎஸ்சி ஊழியர்கள் இரவு, பகலாக ஈடுபட்டு வந்தனர். தற்போது பணிகள் அனைத்தும் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. விரைவில் முடிவுவெளியிடப்படும். அதனால், தேர்வு எழுதியவர்கள் கலக்கம் அடைய தேவையில்லை என்றார்.




Related Posts:

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!