ஏற்காடு
தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, டிசம்பர், 4ம் தேதி, அத்தொகுதி
முழுவதும், விடுமுறை விடப்பட்டது.
சேலம் மாவட்ட கலெக்டரும், தேர்தல்
அலுவலருமான மகரபூஷணம் வெளியிட்ட அறிக்கை: ஏற்காடு
தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, டிசம்பர், 4ம் தேதி, அத்தொகுதியில் உள்ள
அனைத்து அரசு அலுவலகம், அரசு சார்ந்த நிறுவனம், அனைத்து கல்வி நிறுவனம்
மற்றும் அனைத்து தொழிற்சாலைகளுக்கும், செல்லத்தக்க சட்டத்தின் கீழும்,
அரசாணை படியும், பொது விடுமுறை அறிவிக்கப்படுகிறது.
சட்டசபை தொகுதியில் வாக்காளராக இருந்து, சேலம் மாவட்டத்தில் இதர பகுதியில்
பணிபுரியும் அலுவலர்களுக்கு, ஊதியத்துடன் கூடிய விடுமுறையும்
அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...