உலகின் முன்னணி கற்றல் நிறுவனமான பியர்ஸன் 2013 ஆம் ஆண்டுக்கான கல்வி கற்பித்தல் விருதுகளை அறிவித்துள்ளது.
கல்வி அமைப்பில் உண்மையான மாற்றத்தை
செய்து வரும் ஆசிரியர்களை போற்றும் வகையில் ஆண்டுதோறும்
இந்த விருதுகளை அந்நிறுவனம் வழங்கி வருகிறது.கடுமையான போட்டிக்குபின்னர்
அகில இந்திய அளவில் 18 ஆசிரியர்கள் இந்த விருதுக்கு தேர்வு
செய்யப்பட்டுள்ளனர்.அதில் தமிழகத்தை சேர்ந்த 3 பேரும் அடங்குவர்.
திருச்சி தில்லை நகர் கிஆபெ. விசுவநாதன் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் எஸ்.சாய்ராம், அரசுப் பள்ளியில் ஆங்கிலத்தை சிறப்பாக கற்றுக் கொடுத்ததற்கும் பெரியகுளம் விக்டோரியா நினைவு அரசு மேல் நிலைப்பள்ளி ஆசிரியர் வெங்கடேஷ்குமார் அறிவியலை சிறப்பாக கற்றுக்கொடுத்ததற்கும் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.உயர் கல்வியை பொறுத்தவரை சென்னை படூரில் உள்ள இந்துஸ்தான் பல்கலைக் கழகத்தில் புதுமையான முறையில் கல்வி கற்பிக்கும் பேராசிரியர் டி.சுடலைமுத்து விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

very proud to be a teacher.......congrats to all..........
ReplyDelete