பதினொன்றாம் வகுப்பிற்கான
திறந்த தேர்வு புத்தக விபரங்களை சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. புவியியல், உயிரியல் மற்றும் பொருளியல் ஆகிய பாடங்களைப் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. OTBA
(Open text - based assessment) எனப்படும் இந்த தேர்வு 10 மதிப்பெண்கள் அளவீட்டைக் கொண்டது.
இத்தகைய பாடங்களுக்கான வருடாந்திர
தேர்வு, கடந்தகால பயிற்சிகளின் அடிப்படையில்
பள்ளிகளால் நடத்தப்படும். பாடத்திட்டங்களின் அடிப்படையில், கேள்வித்தாள்கள், ஆசிரியர்களால் தயாரிக்கப்படும்.
OTBA தேர்வு, 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு மட்டுமே தனது வாரிய பள்ளிகளில், CBSE -ஆல் நடத்தப்படுகிறது. இறுதி தேர்வுகளின் ஒரு பகுதியாக இது நடத்தப்படுகிறது. 9ம் வகுப்பை பொறுத்தவரை, OTBA உபகரணங்கள், ஆங்கிலம், இந்தி, கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய அனைத்து பிரதான பாடங்களுக்கும் வெளியிடப்பட்டுள்ளன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...