கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்
பணியிடங்களுக்கான (CSIR NET) தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற்றது. நாடு
முழுவதிலும் சுமார் 2 லட்சம் இந்தத் தேர்வில் பங்கேற்றனர்.
இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும்
பொறியியல் உள்ளிட்ட அறிவியல் பிரிவுகளுக்கான இந்த தேர்வில் தமிழகத்தைப்
பொறுத்த வரை சென்னை மற்றும் காரைக்குடியில் தேர்வு நடைபெற்றது. சென்னையில்
17 ஆயிரத்து 600 பேரும், காரைக்குடியில் 6 ஆயிரத்து 500 பேரும் இந்த
தேர்வில் பங்கேற்றனர். காலை 8 மணி முதல் 12 வரையும், பிற்பகல் 2 மணி முதல்
மாலை 5 மணி வரையிலும் தேர்வுகள் நடைபெற்றன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...