Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

டிச. 29ல் "நெட்" தேர்வு: பாரதிதாசன் பல்கலை அறிவிப்பு

 
         யூ.ஜி.சி.,யின் நெட் தேர்வு திருச்சியில் பத்து மையங்களில் வரும் 29ம் தேதி நடக்கிறது என பாரதிதாசன் பல்கலை அறிவித்துள்ளது. இதுகுறித்து பாரதிதாசன் பல்கலை பதிவாளர் ராம்கணேஷ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:


        யூ.ஜி.சி., சார்பில் வரும் 29ம் தேதி இளநிலை ஆராய்ச்சியாளர், விரிவுரையாளகளுக்கான தேசிய தகுதி தேர்வு (நெட்) நடக்கிறது.

         திருச்சி இந்திராகாந்தி மகளிர் கல்லூரி, தேசிய கல்லூரி மேல்நிலைப் பள்ளி, ஹோலிகிராஸ் மகளிர் கல்லூரி, ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி, ஆர்.சி., மேல்நிலைப் பள்ளி, காவேரி மெட்ரிக்., பள்ளி, காவேரி மகளிர் கல்லூரி, தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக்., பள்ளி, இ.வி.ஆர்., கல்லூரி, ஜமால் முகமது கல்லூரி ஆகிய 10 மையங்களில் தேர்வு நடக்கிறது.

இத்தேர்வுக்கு பாரதிதாசன் பல்கலையை தேர்வு மையமாக தேர்வு செய்தவர்கள், தேர்வு மையத்தை பல்கலையின் http://www.bdu.ac.in என்ற இணைய முகவரியில் அறிந்து கொள்ளலாம், தேர்வுக்கு அனுமதி சீட்டு வழங்கப்படமாட்டாது.

பதிவிறக்கம் செய்யப்பட்ட அனுமதி சீட்டில் தங்களது ஃபோட்டோ ஒட்டி, அதில் முதல் நிலை அரசிதழ் அலுவலர் சான்று பெற்று வர வேண்டும்.

தேர்வுக்கான விதிமுறைகள் யூ.ஜி.சி. இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

மேலும், விபரங்களை பல்கலை தேர்வு ஒருங்கிணைப்பாளர் டேனியலை, 98944 37647, 0431 2407057 என்ற ஃபோன் நம்பர்களில் தொடர்பு கொண்டு அறியலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive