வணிக வரித்துறை உதவி அலுவலர், தொழிலாளர் நல
ஆணையர், வேலைவாய்ப்பு இளநிலை அலுவலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில், 1,064
பணியிடங்களுக்கு இன்று குரூப்-2 எழுத்துத் தேர்வு நடைபெறுகிறது.
காலை, 10:00 மணி முதல், பகல், 1:00 மணி வரை
மாநிலம் முழுவதும் 2,269 மையங்களில் குரூப்-2 தேர்வு நடக்கிறது. சென்னையில்
மட்டும் 79 ஆயிரத்து 550 பேர் தேர்வு எழுதுகிறார்கள். இதற்காக 263
மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இன்று நடைபெறவுள்ள முதல்நிலைத் தேர்வில்
தேர்ச்சி பெறுபவர்கள் பிரதானத் தேர்வினை எழுத அனுமதிக்கப்படுவர். அதில்
தேர்ச்சிப் பெறுபவர்கள் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட்டு பணி நியமனம்
வழங்கப்படும். தேர்வுகளை கண்காணிக்க 2 ஆயிரத்து 269 கண்காணிப்பாளர்கள்
நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வுக் கூடத்துக்கு அனுமதிக்கப்பட்ட பேனா
தவிர, புத்தகம், குறிப்புகள், பேஜர், செல்போன், கால்குலேட்டர், மின்னணு
கருவிகள், பதிவு கருவிகள் ஆகியவற்றை எடுத்துச் செல்லக் கூடாது.
அனைத்து மையங்களிலும், தேர்வுப் பணியை வீடியோ
பதிவு செய்ய டி.என்.பி.எஸ்.சி., ஏற்பாடு செய்துள்ளது. 40 ஆயிரத்திற்கும்
மேற்பட்ட அலுவலர்கள், பணியாளர்கள் தேர்வுப் பணியில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பாடத் திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்ட பின்,
நடக்கும் முதல் குரூப்-2 தேர்வு இது தான். குரூப்-1 தேர்வுக்கு அடுத்து,
மிகவும் முக்கிய தேர்வாக, குரூப்-2 உள்ளது. இவ்வாறு, விஜயகுமார்
தெரிவித்தார்.
ஜெனரல் ஸ்டடிஸ் பகுதியில் 75 கேள்விகள்; திறன்
அறிதல் பகுதியில் 25 கேள்விகள்; பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பகுதியில்
இருந்து 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும். ஒவ்வொரு
கேள்விக்கும், தலா, 1.5 மதிப்பெண் வீதம், 300 மதிப்பெண்களுக்கு, தேர்வு
நடக்கிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...