நடப்பு கல்வி ஆண்டில் நியமிக்கப்பட உள்ள, 3,525 ஆசிரியரில், வெறும் 17 இடங்கள் மட்டும் உடற்கல்வி ஆசிரியருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
பி.இ.டி.,
ஆசிரியர் பணியிடங்களை புறக்கணிக்கும் வகையில் கல்வித் துறை நடவடிக்கை எடுத்திருப்பதாக, உடற்கல்வி ஆசிரியர் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் ஆரம்ப பள்ளிகளை தவிர்த்து நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை ஆகிய பிரிவுகளில் மட்டும் 16,328 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் ஒரு பள்ளிக்கு, ஒரு உடற்கல்வி ஆசிரியர் என்ற நிலை கூட இல்லாமல் 3,700 உடற்கல்வி ஆசிரியர் மட்டுமே பணியாற்றி வருவதாக இந்த ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.உடற்கல்வி ஆசிரியர் சிலர் கூறியதாவது: நடப்பு கல்வி ஆண்டுக்கான புதிய நியமன பட்டியலில், தொடக்க கல்வித் துறையில், உடற்கல்வி ஆசிரியருக்கு வெறும் 17 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. பள்ளி கல்வித் துறையில் ஒரு பணியிடம் கூட அளிக்கவில்லை. தொடர்ந்து, உடற்கல்வி ஆசிரியரின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுவருகின்றன.தற்போது, ஒதுக்கப்பட்டுள்ள, 17 இடங்கள் "யானை பசிக்கு சோளப்பொரி" போல் உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர்கூறியதாவது:

மொத்தம், 250 மாணவருக்கு, ஒரு உடற்கல்வி ஆசிரியர் பணியிடமும், கூடுதலாக,
180 மாணவர் இருந்தால், இன்னொரு ஆசிரியர் இடமும் வழங்கலாம் என விதிமுறையில்
உள்ளது. மற்ற ஆசிரியர் பணியிடத்துடன் ஒப்பிடுகையில், உடற்கல்வி ஆசிரியர்
எண்ணிக்கை குறைவு தான். ஆனாலும், புதிய பணியிடங்களை அனுமதிப்பதில், அரசு
தான் முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...