Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

14 விலையில்லா நலதிட்டங்களை பெற்று வழங்கிட ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு பணியாளரை நியமித்திட வேண்டுமென தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை

            தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்  சங்க மாநில பொதுக்குழுக்கூட்டம் திருவண்ணாமலையில் 29.12.2013  ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணியளவில்     ஆனந்தா திருமண மண்டபத்தில்  சிறப்பான முறையில்  நடைபெற்றது  
 .
      இக்கூட்டத்தில் சுமார் 500 –க்கும் மேற்ப்பட்ட  தலைமையாசிரியர்கள்  கலந்து  கொண்டார்கள் . மாநிலத்தலைவர்  திரு . வே.நடராஜன்  தலைமை தாங்கினார்  மாநில பொதுச்செயலாளர் திரு. சாமி . சத்தியமூர்த்தி ,  மாநிலப்பொருளாளர்              திரு . பி .நடராஜன், மாநில அமைப்புச்செயலாளர் திரு. ச. மோகனசுந்தரம்  அவர்கள் சிறப்புறையாற்றினார்கள் . கூட்டத்திற்கான ஏற்பாடுகளை  மாவட்டச்செயலாளர்                 திரு. எம். ரேணுகோபால்  மற்றும் மாவட்ட நிர்வாகிகள் செய்தார்கள் .

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
1.    உயர்நிலைப்பள்ளி  தலைமை ஆசிரியர்களுக்கு  மத்திய அரசுக்கு இணையாண ஊதியத்தை வழங்க வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது

2.    சிறப்பான முறையில் பணியாற்றி வந்த  BRT SUPERVISORS – களை மீண்டும் முன்பு பணியாற்றிய அதே வட்டார வள மையத்தில் மாறுதல் செய்ய வேண்டும் என இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது 

3.    அடுத்த கல்வி ஆண்டில்  பத்தாம் வகுப்பிற்கு முப்பருவக்கல்வி  அறிமுகப்படுத்தும் போது  மாணவர்கள் கல்வியை சிறப்பான முறையில் கற்கும் வகையில் அரசு பொதுத்தேர்வை தொடர்ந்து சிறப்பாக நடத்திட இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது .
4.    அரசானை எண் 720 –ல் எக்காரணத்தைக்கொண்டும்  மாற்றம் செய்யக்கூடாது என இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது

5.    மாவட்டக்கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான  பதவி உயர்வின்போது  100% பணியிடங்களை பதவி உயர்வுக்கு தகுதியான உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு மட்டுமே வழங்கிட வேண்டுமென இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது 

6.    தமிழக அரசால் வழங்கப்படும்  14 விலையில்லா நலதிட்டங்களை பெற்று வழங்கிட ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு பணியாளரை நியமித்திட வேண்டுமென இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது .

7.    கல்வித்துறைக்கு  புள்ளி விவரங்களை உடனுக்குடன்  தருவதற்கு ஏதுவாக  அனைத்துப் பள்ளிகளுக்கும்  கணினி , ஜெராக்ஸ் இயந்திரம் மற்றும் இண்டர்நெட் வசதிகளை ஏற்படுத்தி அதை கையாள தகுதி வாய்ந்த கணினி ஆசிரியர்களை நியமிக்கமாறு இப்பொதுக்குழு கேட்டுக்கொள்வதோடு 

        இத்துடன் சேர்த்து மொத்தம் 19 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து   தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்கள் முன்பும் 05.02.2013 புதன்  மாலை 5.30 மணியளவில் மாபெரும்  கவன ஈர்ப்பு  ஆர்பாட்டம் நடத்திட   இப்பொதுக்குழு ஒரு மனதாக முடிவெடுத்துள்ளது  .

         செய்தி தொடர்பு  :  சி . சுகுமார்  ,  தலைமையாசிரியர் ,
                                ஆதனூர் , திருவண்ணாமலை மாவட்டம்




6 Comments:

  1. THANKS FOR IT-தமிழக அரசால் வழங்கப்படும் 14 விலையில்லா நலதிட்டங்களை பெற்று வழங்கிட ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு பணியாளரை நியமித்திட வேண்டுமென இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது

    ReplyDelete
  2. இச்செய்தியை வெளியிட்ட பாடசாலைக்கு தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேனிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்கம் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறது . அனைத்து உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களும் வருகிற 05.02.2014 அன்று நடைபெற இருக்கும் ஆர்பாட்டத்தில் பெரும்திறளாக கலந்து கொண்டு ஆர்பாட்டத்தின் வாயிலாக நமது கோரிக்கைகளை தமிழக முதல்வர் அம்மா அவர்களின் மேனான கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் . இவன் : சி . சுகுமார் , தலைமையாசிரியர் , அரசு உயர்நிலைப்பள்ளி , ஆதனூர் , திருவண்ணாமைலை மாவட்டம்

    ReplyDelete
  3. கல்வித்துறைக்கு புள்ளி விவரங்களை உடனுக்குடன் தருவதற்கு ஏதுவாக அனைத்துப் பள்ளிகளுக்கும் கணினி , ஜெராக்ஸ் இயந்திரம் மற்றும் இண்டர்நெட் வசதிகளை ஏற்படுத்தி அதை கையாள தகுதி வாயந்த கணினி ஆசிரியர்களை நியமிக்கவேண்டும் என்ற கோரிக்கை மிகவும் வரவேற்கதக்கது .இதை கல்வித்துறை உடனடியாக செயல்படுத்தினால் தலைமையாசியர்களுக்கு ஒரு பெரிய உதவியை செய்ததாக இருக்கும் இவன் : எம் . கேசவன் , தலைமையாசிரியர் , அரசு உயர்நிலைப்பள்ளி , மொரப்பந்தாங்கல் , திருவண்ணாமலை மாவட்டம்

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. THANK YOU SIR BY COMPUTER TEACHERS ASSOCIATION BY ERODE

    ReplyDelete
  6. தலைமையாசிரியர் சங்க கோரிக்கைகளை பாடசாலை இணைதளம் மூலம் வெளியிட்ட பாடசாலைக்கும் தலைமையாசிரியர் திரு.சி.சுகுமார் ஐயா அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive