1.வினாத்தாளை பிரிக்க அனுமதிக்கப்பட்டவுடன் முதல் வினாவைப் படித்தவுடனே விடையளிக்க முற்படவேண்டாம் .
2.ஒருமுறை 200 வினாக்களையும் படித்து பாருங்கள் .
3.முதல் வாசிப்பில் சரியான விடை தெரிந்த வினாக்களை மட்டும் புள்ளியோ அல்லது சிறிய அளவிலான டிக்கோ அடித்து குறித்து கொள்ளுங்கள் .
4.இரண்டாவது வாசிப்பில் தெரியாத வினாக்களுக்கான விடைகளையும் முடிவு செய்து கொள்ளுங்கள்.
5.முதலில் உமக்கு தோன்றிய விடைகளை இரண்டாவது வாசிப்பில் மாற்ற வேண்டாம்.
6.ஒவ்வொரு வினாக்களுக்கு விடை அளிக்கும்போதும் வினா எண்ணில் விரலை வைத்து சரியான விடையினை மார்க் செய்யவும்.
7.தெரிந்த வினாக்களுக்கு முதலில் விடையளிக்கலாம் என்றெண்ணி அங்கொன்றும் இங்கொன்றுமாக விடையளிக்க வேண்டாம். இதனால் டபுள் ஷேடிங் ஏற்பட வாய்ப்புள்ளது.
8.நான்கு
OPTION னுமே தெரியாத வினாக்களுக்கு ஏதேனும் ஒரு விடையை தெரிவு
செய்யுங்கள்.( 20 வினாக்களுக்கு விடை தெரியவில்லை என்றால் அந்த 20
வினாக்களுக்கும் ஏதேனும் ஒரு விடையை தெரிவு செய்யுங்கள்.)
9.கடைசி 45 நிமிடங்களில் 1-200 வினாக்களுக்கும் விடையளிக்க முடியும்.
10.மிக முக்கியமானது நேர நிர்வாகம். ஒவ்வொரு அரை மணித்துளிகளுக்க ும் கடந்து வந்த நேரத்தை கவனியுங்கள்.
REASONING போன்ற நெடுநேரம் யோசிக்க வைக்கும் வினாக்களில் சிக்கிக் கொள்ளாதீர்கள். அதற்கேற்ப திட்டமிடுங்கள்.
COMPLETE YOUR ANSWER SHEET . 200
வினாக்களுக்கும் நீங்கள் படித்து விடையளித்தாலே PRELIMS வெற்றி சாத்தியமாகும்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...