CPS (தன் பங்களிப்பு ஓய்வூதிய
திட்டம்) -ல்
உள்ள ஆசிரிய
சகோதர சகோதரிகளுக்கு
வணக்கம், 01.04.2003 அன்று முதல்
தமிழக அரசு
பணியில் சேர்ந்த
அரசு ஊழியர்
மற்றும் ஆசிரியர்களுக்கு
பழைய ஓய்வூதிய
திட்டத்தை மாற்றி
புதிதாக தன்
பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் என்ற புதிய
திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இப்புதிய ஓய்வூதியத்
திட்டத்தில் இணைக்கப்படும் ஒவ்வொரு ஆசிரியர்களின் சம்பளத்திலிருந்தும்
பிடிக்கப்படும் வருங்கால வைப்பு நிதி தனியார்
முதலீட்டு நிறுவனங்களிடம்
செலுத்தப்படும்.
அந்நிறுவனங்கள் இச்சேமிப்பை
அரசின் பத்திரங்களில்
மட்டுமின்றி, பங்குச் சந்தையிலும், கார்ப்பரேட் நிறுவனங்கள்
வெளியிடும் பத்திரங்களிலும் முதலீடு செய்யும். இதன்
மூலம் கிடைக்கும்
இலாபமோ/நட்டமோ,
அது ஒவ்வொரு
ஆசிரியர்களின் சேமிப்புக் கணக்கிலும் சேர்க்கப்படும். பழைய
ஓய்வூதியத் திட்டத்தில் ஆசிரியர்களின் வருங்கால வைப்பு
நிதியை எந்தெந்த
திட்டங்களில் முதலீடு செய்வது என்பது குறித்து
கருத்துக் கூறும்
உரிமை தொழிற்சங்கங்களுக்கு
வழங்கப்பட்டிருந்தது.
புதிய ஓய்வூதியத்
திட்டத்திலோ அது இல்லை, ஓய்வூதிய நிதியை
நிர்வகிக்கும் தனியார் முதலீட்டு நிறுவனங்கள் அறிவிக்கும்
முதலீட்டுத் திட்டங்களில் ஏதாவதொன்றைத் ஆசிரியர்களின் தானே
தீர்மானித்துக் கொள்ள வேண்டும்; அல்லது, அவர்களின்
சார்பில் முதலீட்டு
நிறுவனங்களே முதலீடு செய்து கொள்ளும் உரிமை
வழங்கப்பட்டுள்ளது. அதாவது, தன்னுடைய
ஓய்வூதிய நிதியைக்
கொள்ளையிடும் உரிமையை எந்த முதலாளிக்கு வழங்குவது
என்று தீர்மானிக்கும்
உரிமை ஆசிரியர்களுக்கு
வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்ளையிலிருந்து
தப்பிக்கும் உரிமையோ, தனது ஓய்வூதிய நிதியை
வேறுவிதமாகப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமையோ ஆசிரியர்களுக்கு
கிடையாது.
இலாபம்
கிடைத்தாலும், நட்டமடைந்தாலும், ஒவ்வொரு ஆசிரியர்கள், தான்
ஓய்வு பெறும்
வரை மாதாந்திர
நிதியைச் செலுத்திக்
கொண்டேயிருக்க வேண்டுமே தவிர, இத்திட்டத்திலிருந்து விலகிச் சென்றுவிட முடியாது. திட்டத்திலிருந்து
விலகுவது மட்டுமல்ல,
ஒருவர் தனக்குத்
தேவைப்படும் நேரத்தில் தனது வருங்கால வைப்பு
நிதி சேமிப்பிலிருந்து
பணத்தை எடுப்பதுகூட
அவ்வளவு எளிதான
விவகாரமல்ல. மேலும், ஒரு ஆசிரியர் வேலையிழந்து,
அதனால் மாதந்தோறும்
செலுத்த வேண்டிய
சந்தா தொகையைச்
செலுத்தத் தவறும்
பட்சத்தில் அவரின் சேமிப்பு முழுவதையும் கம்பெனியே
முழுங்கிவிடும் அபாயமும் இத்திட்டத்தில் உள்ளது. ஆசிரியர்களின்
ஓய்வுபெறும்பொழுது, அவர்களின் சேமிப்பு
சந்தையில் முதலீடு
செய்யப்பட்டு ஈட்டித் தந்திருக்கும் வருமானத்திலிருந்து 60 சதவீதம் மொத்தமாகத் திருப்பித் தரப்படும்;
மீதி 40 சதவீதம்
அவர்களுக்குக் குறைந்தபட்ச மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற்காக
காப்பீடு நிறுவனங்களில்
முதலீடு செய்யப்படும்.
அதேசமயம், ஒரு
ஆசிரியர் தான்
ஓய்வு பெறுவதற்கு
முன்பாக இத்திட்டத்திலிருந்து
விலகிக் கொள்ள
நேர்ந்தால், அவரது சேமிப்பிலிருந்து 80 சதவீதம் பிடித்தம்
செய்யப்பட்டு, காப்பீடு நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும்.
இந்தக் குறைந்தபட்ச
மாதாந்திர ஓய்வூதியம்
என்பது சந்தை
நிலவரத்தைப் பொறுத்து மாறக்கூடியதே தவிர, உத்தரவாதமானது
அல்ல . சந்தை
நிலவரம் குறைந்தபட்ச
ஓய்வூதியம் தரக்கூடிய நிலையில் இல்லை என்றால்,
ஓவ்வொரு ஆசிரியரும்
தனக்குக் குறைந்தபட்ச
மாதாந்திர ஓய்வூதியம்
அளிப்பதற்காகப் பிடிக்கப்படும் முதலீட்டை அதிகரித்துக் கொண்டே
செல்ல நேரிடும்.
இவையெல்லாம், பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களைச்
சந்திக்காமல் நிதானமாக வளர்ந்து கொண்டிருந்தால்தான் கைக்குக் கிட்டும். பங்குச் சந்தை
தலைகுப்புறக் கவிழ்ந்துவிட்டாலோ, பங்குச்
சந்தையில் முதலீடு
செய்யப்பட்ட ஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதி
கடலில் கரைத்த
பெருங்காயமாகக் காணாமல் போகும். இப்படிப்பட்ட அபாயம்
நடக்குமா என்ற
கேள்விக்கே இங்கு இடமில்லை. இப்படி நடப்பது
தவிர்க்க முடியாதது
என்பதைத்தான் முதலாளித்துவத்தின் குருபீடமான
அமெரிக்காவின் அனுபவங்கள் நிரூபித்திருக்கின்றன.
புதிய ஓய்வூதியச்
சட்டத்தில், “ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச
உத்தரவாதமான மாதாந்திர ஓய்வூதியம் வழங்க முடியாது;
சந்தையில் திடீர்
இழப்புகள் ஏற்பட்டால்,
சேமிப்புத் தொகையில் ஒரு சிறு பகுதியைத்
திருப்பித் தருவதற்குக்கூட உத்தரவாதம் தர முடியாது”
என நிபந்தனைகளை
விதித்திருக்கிறது.
ஆசிரியர்களின் சம்பளத்திலிருந்து
வருங்கால வைப்பு
நிதியைப் பிடித்தம்
செய்து, அதனை
அரசிடம் கட்டாமல்,
அந்நிதியில் பல்வேறு முறைகேடுகளையும் கையாடல்களையும் தனியார்
முதலாளிகள் செய்துவருவது ஏற்கெனவே அம்பலமாகிப் போன
உண்மை. இனி
இப்படிப்பட்ட மோசடிப் பேர்வழிகளும் தனியார் முதலீட்டு
நிறுவனங்களும் கூட்டுக் களவாணிகளாகச் செயல்படுவதற்கான வாய்ப்பை
இந்தப் புதிய
ஓய்வூதியத் திட்டம் திறந்துவிட்டுள்ளது.
இத்தனியார் முதலீட்டு நிறுவனங்கள் கணக்கு வழக்குகளை
ஒழுங்காக வைத்திருப்பார்களா,
ஆசிரியர்கள் ஓய்வு பெறும்பொழுது அவர்களின் சேமிப்பை
முறையாகத் திரும்ப
ஒப்படைப்பார்களா எனக் கேட்டால், அவர்களைக் கண்காணிப்பதற்குத்தான்
ஓய்வூதிய ஒழுங்குமுறை
ஆணையத்தை உருவாக்கியிருப்பதாகக்
கூறுகிறார்கள்.
வேலிக்கு ஓணாண் சாட்சியாம். தொலை
தொடர்புத் துறையிலும்
காப்பீடு துறையிலும்
மின் துறையிலும்
அமைக்கப்பட்டுள்ள ஒழுங்காற்று ஆணையங்கள் அத்துறைகளில் நுழைந்துள்ள
தனியார் கார்ப்பரேட்
நிறுவனங்களின் கொள்ளையைச் சட்டபூர்வமாக்கும்
திருப்பணியைத்தான் செய்து வருகின்றன.
ஒவ்வொரு ஆசிரியர்களிடமிருந்தும்
மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்பு
நிதியை ஒரு
இருபது, முப்பது
ஆண்டுகளுக்குத் தானே வைத்துக் கொண்டு, தமது
விருப்பம் போலப்
பயன்படுத்திக் கொள்ளத் தனியார் முதலீட்டு நிறுவனங்களுக்கு
அனுமதி அளித்திருப்பதை,
2 ஜி ஐ
விஞ்சும் ஊழலாகத்தான்
சொல்ல முடியும்.
எனவே, நமக்கு
உரிய ஓய்வூதிய
உரிமையை பெற
CPS திட்டத்தின் அடிப்படையில் வந்த ஆசிரியர்கள் அனைவரும்
ஒன்று கூட
வேண்டிய தேவை
இருக்கிறது, ஆகவே, ஆசிரியர் பெருமக்களாகிய நாம்
நமது உரிமைக்காக
போராட ஒரு
கட்டமைப்பு உருவாக்காமலும், அரசின் கவனத்தை ஈர்க்காமலும்,
தொடர்ந்து நாம்
பணியை சிறப்பாக
செய்துவருகிறோம். நமது கோரிக்கைக்காக அனைவரும் போராடினாலும்,
நம்முடைய பிரச்சனைகளுக்கு
நாமே தீர்வு
காணாமல் ஒதுங்கி
நின்று வேடிக்கை
பார்ப்பது என்பது
வேதனை அளிக்கிறது.
எனவே, CPS திட்டத்தில்
உள்ள ஆசிரியர்களை
ஒருங்கிணைத்து நமது உரிமையை பெறுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட
சங்கம் தான்
தமிழ்நாடு CPS ஆசிரியர் கழகம்(TNCPSTA). ஆசிரிய சகோதர
சகோதரிகள் அனைவரும்
தங்களை TNCPSTA வில் உறுப்பினராக இணைத்துக்கொண்டு ஒன்றுபடுவோம்!
போராடுவோம்! வெற்றிபெறுவோம்! . . . தொடர்புகொள்ள:
TNCPSTA மாநில ஒருங்கிணைப்பாளர் : 9842043127
கண்டிப்பாக நமக்காக நாம் போராட வேண்டிய நேரமிது. அனைத்து சங்கங்களின் பதவியில் உள்ளவர்களும் பழைய ஓய்வூதிய திட்டத்தில் உள்ளவர்கள். அவர்களுக்கு நமது மாத சந்தா மட்டுமே வேண்டும். நமக்காக போராட அவர்களுக்கு அவசியமில்லை. பாரதம் முழுவது புதிய அலுவலர்கள் ஒன்று சேர்ந்தல் மட்டுமே இதை சாத்தியமாக்க முடியும்.
ReplyDeleteஉண்மைதான் அதற்கு இன்னும் சில வருடங்கள் காத்திருக்க வேண்டும்.
ReplyDeleteTrue , dear friends. All the unions are told that the fight for removal of CPS. Only from their Mouth, not from the Heart. Even I am an employee of old GPF I also feel the Same. Extent your wing to all state and central Govt. Employees those who joined after 2003 not be only with Trs
ReplyDeletetamil nadu assiriyar munetra sangam uribinarkal annaivarume cps teachers including state president mr. Thiyagarajan. so we are all under TAMS.
ReplyDeleteWe are ready to fight against cps
ReplyDeleteYes we must start our steps immediately.
ReplyDeleteI support to tmcpsta
ReplyDeleteWe are extending our heartiest and full fledged support to our Association.
ReplyDeleteWe are proud to be the members of our association.
We will stand unite to get success in our motive.
We are ready at any time at any where to fight and succeed our demands.
congratulations
by
govt high school cps teachers
gangaleri
krishnagiri dt
school cps co-ordinator 9751117935