தமிழ்நாட்டில் மத்திய அரசு, ஏற்கெனவே ஆக்கிர மித்தது போதாது என்ற முறையில், கல்வித் துறையில் புதியதோர் ஆக்கிரமிப்பை ஏற்படுத்தும் வகையில்
ராஷ்டிரிய ஆதர்ஷ் வித்தியாலயா திட்டப்படி, மத்திய அரசும்,
தனியாரும் கூட்டுச் சேர்ந்து மாதிரிப் பள்ளிகள்
என்று தனியே தொடங்கிட முயற்சிப்பதாக வந்துள்ள செய்தி- சரியாக இருக்குமானால் - அதை
நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
கல்வி என்பது ஏற்கெனவே மாநிலப்
பட்டியலில் இருந்த முக்கிய துறையாகும்; அதனை -
நெருக்கடி கால நிலையில் - ஓசையில்லாமல் மத்திய அரசு, பொதுப் பட்டியலில் (State to Concurrent List) கொண்டு போய் சேர்த்து மாற்றம் ஏற்படுத்தியது.
இது நடந்தது 1976-இல்; அதன்பின் வந்த ஆட்சிகள் இதை ஒரு
முக்கிய பிரச்சினையாக எடுத்துக் கொண்டு, மீண்டும் பழைய
படி மாநிலப் பட்டியலுக்குள் கல்வியைக் கொண்டு வரத் தவறியதன் விளைவே, பல்வேறு சமூக அநீதிகளும், சமூகக்
கொடுமைகளும் சட்ட பூர்வமாகவே மத்திய அரசால் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன -
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை என்ற கல்வித் துறையின் மூலம். எடுத்துக் காட்டாக,
மாநில அரசு ஒழித்த பொது நுழைவுத் தேர்வு என்பதை
- மருத்துவக் கல்வி, மற்றும் தொழிற்படிப்புகளில் கொண்டு வர
பல்வேறு முயற்சிகளை ஆதிக்க அதிகார சக்திகள் செய்து வரு கின்றன. ஏற்கெனவே
உச்சநீதிமன்ற பெரும்பான்மைத் தீர்ப்பு நுழைவுத் தேர்வு ரத்து சரிதான் என்று கூறிய
பிறகும் மருத்துவக் கவுன்சில் மறுசீராய்வு மனுவைப் போட்டுள்ளது; மத்திய அரசும் அதனை ஆதரிக்கிறது!
இது போன்ற கல்வியில் இரண்டு எஜமானர்கள் ஒரே நேரத்தில் அதிகாரம் செலுத்தும் விசித்திர நிலை ஏற்பட்டுள்ளது!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...